வெங்கட் பிரபுவின் முதல் படம் ‘சென்னை 28’.  புதுமுக இயக்குனராக தனது தம்பி உட்பட வாலிபப் பசங்களாக வைத்து எடுத்த கிரிக்கெட் விளையாட்டைக் களமாகக் கொண்ட படம். இப்படம், தமிழ் சினிமாவில் புதிய டிரெண்டை உருவாக்கி மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்த வெங்கட் பிரபு, படிப்படியாக அஜித்தை இயக்குவது வரை உயர்ந்து, கடைசியில் பிரியாணி படத்தோடு அவரது இயக்குனர் சமையல் ரசிகர்களைக் கவராமல் போனதால் படங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்தார். இப்படியே போனால் மியூசிய டைரக்டர்களின் வரிசையில் நாமும் சேர்ந்துவிடுவோம் என்பதை உணர்ந்து  ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.

ஏப்ரல் 4ஆம் தேதி தனது ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை பூஜை போட்டு  வெங்கட் பிரபு தொடங்கியுள்ளார். கோவில் ஒன்றில் எளிமையாக நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், நடிகர்கள் சிவா, பிரேம்ஜி, விஜய் வசந்த், வைபவ், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், நடிகை விஜயலட்சுமி கங்கை அமரன், எடிட்டர் பிரவீன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

சென்னை 28 ன் இரண்டாம் பாகம் என்பதால் சென்னை 56 என்று படத்துக்கு டைட்டில் வைப்பார்களோ.

Related Images: