தனது மார்க்கெட் ஏன் சரியாகப் போகவில்லை என்று மலையாள மாந்த்ரீகர்கள், வாஸ்து, நியுமராலஜி என்று பல வழிகளிலும் ப்ரியங்கா ஆராய்ந்ததில் தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொள்வது சிறந்த வழியென்று அவர்கள் சொல்லவே பெயரை தற்போது மாற்றியிருக்கிறாராம்.
அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ” ப்ரியங்கா என்ற பெயரில் இங்கே ஏற்கெனவே சில நடிகைகள் இருந்தது, இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிந்தது. பெயர்க் குழப்பம் வேண்டாமே என்பதற்காகத்தான் ஸ்ரீ ஜா-வாகிவிட்டேன். இன்னொன்று நியூமராலஜிபடியும் எனக்கு இந்தப் பெயர் சரியாக இருக்கும் என்றார்கள்.
நான் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சாரல். படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ரீங்காரம் படம் ஷூட்டிங் முடிந்து, இறுதிக் கட்ட வேலைகள் நடக்கின்றன. இன்னொரு படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.நான் நடிக்கவிருக்கும் திருப்பதி லட்டு படம் இன்னும் சில தினங்களில் தொடங்கவிருக்கிறது,” என்றார்.
இந்த வருஷம் ஸ்ரீஜா ன்ற பெயர்ல புதுசா நாலு பேர் ஹீரோயின் என்ட்ரி தர்றதாக் கேள்விப்பட்டேன் மிஸ். என்ன செய்யப் போறீங்க ?