பெப்ஸி ஊழியர்களை ஒரு சிறிய மிரட்டல் மூலம் வழிக்குக்கொண்டுவந்து விடலாம்’ என்ற எங்கள் நினைப்பில் மண் வாரிப்போட்டு விட்டு, சினிமா துறைக்கே ஒரு பெரும் துரோகம் செய்துவிட்டார் எஸ். ஏ. சந்திரசேகர் என்று தயாரிப்பாளர் சங்கமே குமுறிக்கொண்டிருக்கும் வேளையில், அவரது ராஜினாமா கோரிக்கையும் நிமிடத்துக்கு நிமிடம் வலுத்து வருகிறது.

பல சங்கங்களுக்கான பிரச்சினைகள் பேசித்தீர்க்கப்படாமலே உள்ள நிலையில், அமைச்சருடன் அமர்ந்து எல்லா பிரச்சினைகளையும் இரண்டே நிமிடத்தில் பேசித்தீர்த்தது போல் எஸ்.ஏ.சி. கூறுவது சுத்த மோசடி.தயாரிப்பாளர்கள் சங்கம் ஆரம்பிக்க நினைத்த புதிய சங்கத்தை குழி தோண்டிப் புதைக்கும் ஒரு நோக்கம் தவிர அதில் வேறு எதுவும் இல்லை.இன்னொரு சுயநலமான நோக்கம் அவரது மகன் விஜயின் படம் ஷூட்டிங் கிளம்பவேண்டுமென்பது.

இந்த துரோகத்துக்கு தண்டனையாக எஸ்.ஏ.சி. உடனே ராஜினாமா செய்யாவிடில், அவர் ராஜினாமா செய்யவைக்கப்படுவார் என்கின்றன தயாரிப்பாளர் தரப்பு வட்டாரங்கள்.

இந்நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் கவுன்சிலுக்கு வந்த எஸ்.ஏ.சி.யோ,’’நான் சினிமாவுக்கு சேவை செய்வதற்கென்றே அவதாரம் எடுத்தவன்.அப்படியெல்லாம் ராஜினாமா செய்து என் சினிமா சேவையை நிறுத்திக்கொள்ளமுடியாது’ என்கிறார்.

இன்னொரு பக்கம் நடிகர் சங்கத்தினர் ஒரு ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் நடத்தி, நாங்க ரெண்டுபேர் பக்கமும் இருக்கோம். நடுநிலை என்கின்றனர்.

மொத்தத்தில், ஆளாளுக்கு கட்டி உருண்டு திரையுலகம் நாறிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், ’ஊரு ரெண்டுபட்டா…’ என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.