நேற்று ரிலீஸான , சந்தானத்துடன் உதயநிதியும் நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி’ மக்கள் மத்தியிலும் ஓ.கே ஆகியுள்ளது. படத்துக்கு 10 கோடியும் விளம்பரத்துக்கு இன்னும் சற்று அதிகமாகவும் செலவழித்திருந்த உதயநிதி, ஆரம்பத்திலிருந்தே இந்தப்படத்தில் தாத்தா கருணாநிதியின் ‘திருப்பார்வை’ படாமலே காப்பாற்றி வந்தார்.
அதனாலேயே ‘ஓகே.ஓகே’ வுக்கு தி.மு.க.கலர் இல்லாமல் ஒரு பொதுவான படம் என்ற பார்வையும், யாரும் எதிர்பாராத நல்ல ஓபனிங்கும் கிடைத்தது.
இதை நேற்று இரவு கேள்விப்பட்ட பாசக்கார தாத்தா, அதிகாலையில் எழுந்து கலகக் கண்மணிகளை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பார்க்கச் சொல்லி ஒரு மிக நீண்ட கடிதம் எழுத ஆரம்பித்தாராம்.
‘’சிங்க நடை கொண்ட என் பேரன் உதயநிதி, அன்சிகா என்னும் நங்கையுடன்…என்று தொடங்கும் அந்தக்கடிதத் தகவலை தன் தந்தை மூலம் தெரிந்துகொண்ட உதயநிதி, உடனே பதறிப்போய், ‘’தாத்தா இது உன் பேரன் படம்னு சொல்லி விளம்பரம் பண்ணியிருந்தா பிரியாணி பொட்டலமும் குவார்டரும் வாங்கிக் குடுத்திருந்தாக்கூட தியேட்டர் பக்கம் ஒருத்தரும் வந்துருக்க மாட்டாங்க. நானே சந்தானம்னு ஒருத்தரு கூட சேர்ந்து சந்துல சிந்து பாடிக்கிட்டிருக்கேன். நீ நடுவுல கலகக் கண்மணிகளை உசுப்பேத்தி என் பொழப்பை ரணகளப்படுத்தீராத’ என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு வந்தாராம்.
அதேபோல் ஸ்டாலினும்,’ யாரும் கட்சிக்கொடிய கட்டிக்கிட்டு தியேட்டர் போகக்கூடாது. ரொம்ப நாளைக்கப்புறம் இப்பதான் நம்ம குடும்பப்படம் ஒண்ணை மக்கள் ஏத்துக்கிட்டிருக்காங்க’ என்று ரொம்ப ஸ்ட்ரிக்டாகவே கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாராம்.