சந்தனக்கட்டை வீரப்பன் கதையைக் கையில் எடுத்தாலும் எடுத்தார், இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷுக்கு வரிசையாய் ஏகப்பட்ட தலைவலிகள்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, என் கணவர் கதையை என் அனுமதியின்றி எடுக்கிறார்கள் என்று கோர்ட் மூலமாகவும், தனிப்பட்ட பஞ்சாயத்துகள் மூலமாகவும் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்க, இப்போது ‘நக்கீரன்’ கோபாலும் முழுமூச்சாக கோர்ட்டில் படத்துக்கு தடை கேட்டு தனக்கு ரமேஷிடமிருந்து ஏதாவது ’வடை’ கிடைக்குமா என்று நாக்கு சப்ப ஆரம்பித்திருக்கிறார்.
‘என்னோட ‘வன யுத்தம்’ படத்துல கோபால் கேரக்டரையே நான் வக்கலீங்க. கதையில ஒரு சின்ன கிளுகிளுப்பாவது இருக்கட்டுமேன்னு நடிகை லட்சுமி ராயை ஒரு பத்திரிகை நிருபரா நடிக்க வச்சிருக்கேன்.லட்சுமி ராய்க்கு மீசைகூட கிடையாது. ஏற்கனவே வீரப்பன் பேரை வச்சி சம்பாதிச்சது போதாதுன்னு ஆளாளுக்கு கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கி என்னை மிரட்டுறாங்க’ என்று பரிதாபமாகப் புலம்பும் ரமேஷ், கோர்ட்டுக்கும், கோபாலுக்கும் ஒரு சேரப் படத்தைக்காட்ட இம்மாத இறுதி வரை நேரம் கேட்டிருக்கிறாராம்.
வீரப்பனுக்கு வேண்டியவங்க வேற யாராவது காட்டுக்குள்ள சுத்திக்கிட்டிருந்தா, சீக்கிரமா வெளிய வந்து உங்களுக்கு வர வேண்டிய பங்கை ‘வனயுத்தம்’ ரிலீஸுக்கு முந்தி வாங்கிட்டுப்போங்க.