சுராஜ் இயக்கத்தில் நடித்துவரும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ முடிந்தவுடன்,ஓ.கே.ஓ.கே’ டைரக்டர் ராஜேஷின் இயக்கத்தில், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி.
ஸ்ட்ரைக் பஞ்சாயத்துக்கள் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. அதனால் மற்றவர்கள் நாமும் ஷூட்டிங் கிளம்பி விடலாமே’ என்ற எண்ணத்தில் ராஜேஷ் கார்த்தியை அணுகியபோது, ‘’ சார் நீங்க வெறுமனே ஒரு அவுட்லைன் மட்டும் தான் சொல்லியிருக்கீங்க. முழுக்கதையையும் சொல்லுங்க சார். அப்புறம் ஷூட்டிங் எப்பக் கிளம்புறதுன்னு முடிவு பண்ணிக்கலாம்’’ என்றாராம்.
இன்று வெளியாகும் ‘ஒருகல் ஒரு கண்ணாடியின் ரிசல்ட் சுமாராக இருக்கும் பட்சத்தில் ராஜேஷைக் கழட்டி விடும் எண்ணத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் கார்த்தி, அதே ராஜேஷிடம், ‘நாங்க ரெண்டு பேரும் ஜோடி போட்ட ‘நான் மகான் அல்ல’ பாத்த ஃபேன்ஸ் எல்லாம், அடுத்து எப்ப காஜல் கூட கைகோர்க்கப் போறீங்கன்னு நச்சரிக்கிறாங்க பாஸ். நம்ம காம்பினேசனுக்கு எப்பிடியாவது காஜலையே கரெக்ட் பண்ணிடுங்க பாஸ்’ என்று ஒரு தர்மசங்கடமான வேலையையும் ஒப்படைத்திருக்கிறாராம்.
இப்படி ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ன்னு டைட்டில் வச்சதுக்காக இப்பிடி ஆள் புடிக்கிற வேலையெல்லாம் நம்ம கிட்ட குடுக்குறாங்களே என்று விசனப்படுகிறாராம் ராஜேஷ்.