‘நமீதா ஐ லவ் யூ’என்ற கன்னடப்படத்தில் சூடுபிடிக்கத்துவங்கி, தற்போது கைவசம் ஜகதாம்பா, பென்கி பெருகல்லே போன்ற கன்னடப்படங்களிலும் சர்கார் குண்டா. சுக்ரா ஆகிய தெலுங்குப்படங்களிலும் பிஸியாக இருக்கும் நமீதாவுக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லையே என்பதில், உடல் ஒரு சுற்று இளைத்துப்போகிற அளவுக்கு, ஏகப்பட்ட வருத்தம்.

‘ வா மச்சான்ஸ் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாம்’ என்று தனக்கு நெருக்கமான சில நிருபர்களுக்கு மட்டும் நேற்று அழைப்பு விட்டிருந்தார் நமீதா.

அவருடன் ஒரு அரை மணி நேரம் ‘கடலை’ போட்டதிலிருந்து :

’’இப்பல்லாம் தமிழ்ப்படங்கள்ல உங்கள தரிசிக்க முடியலையே ?’’

‘’எனக்கு மட்டும் தமிழ்ல நடிக்கக்கூடாதுன்னு ஆசையா என்ன? என்னவோ திடீர்னு எதிர்பாராம ஒரு கேப் விழுந்துச்சி. அந்த நேரம் பாத்து கன்னட ,தெலுங்கு படங்கள்ல பிஸியாயிட்டேன். ஆனா எப்பவும் என்னோட ஃபேவரிட் மச்சான்ஸ் நீங்கதான். அந்த முடிவோட தமிழ்ல பழையபடி ஒரு பெரிய ரவுண்ட் வரனுமுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.

’சிலுக்கு கேரக்டர்ல நீங்க நடிக்கப்போறதா ஒரு பரபரப்பான டாக் இருக்கே?’’

கொஞ்சநாள் முந்திதான் ‘டர்ட்டி பிக்ஷர்’ இந்திப்படம் பாத்தேன். அதப்பாத்ததுலருந்தே தமிழ்ல யாராவது ‘சிலுக்கு’ கதையை படமா எடுத்தா அதுல நான் தான் நடிக்கனுமுன்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா இப்ப இருக்க நடிகைகள்லயே சிலுக்கு அளவுக்கு செக்ஸியான ஃபிகர் நான் தான்.

அந்த கேரக்டர எனக்கு யாராவது குடுக்கிற பட்சத்துல, தேவைப்பட்டா இன்னும் கொஞ்சம் ஸ்லிம்ம்மா மாறவும், என் சம்பளத்தை எவ்வளவு வேணும்னாலும் குறைக்கவும் நான் தயார்.

இதுவரைக்கும் அப்படி ஒரு ஐடியாவோட யாராவது உங்களை அணுகியிருக்காங்களா?

இல்ல. ஆனா ரெண்டுமூனுபேர் போட்டிபோட்டுக்கிட்டு ஸ்கிரிப்ட் பண்ணிக்கிட்டுருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த மச்சான்ஸ் மட்டும் சிலுக்கு கேரக்டருக்கு என்னைத்தேடி வரலைன்னா, நான் கோர்ட்டுக்கு கூட போக தயங்க மாட்டேன். அந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு அவ்வளவு வெறியா இருக்கேன்.

இவ்வளவு ஆர்வமா இருக்கீங்களே, அப்ப நீங்களே ஏன் அந்தப்படத்தை புரடியூஸ் பண்ணக்கூடாது?’’

படம் தயாரிக்கிற அளவுக்கு நான் இன்னும் வளரலையே மச்சான்ஸ்.யாராவது ஃபைனான்ஸியர் மச்சான்ஸ் ஃபுல் ஃபைனான்ஸ் பண்றதா இருந்தா நானே புரடியூஸ் பண்றதப்பத்தி கூட யோசிக்கலாம்.

யாராவது வசதியான பணத்தை கையில வச்சிக்கிட்டு அசதியான வாழ்க்கை வாழ்ந்துக்கிடிருக்கீங்கன்னா, நீங்க ஏன் மாத்தி யோசிக்கக்கூடாது?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.