அல்வா கொடுப்பதில் வல்லவர்கள் அரசியல்வாதிகளா அல்லது சினிமாக்காரர்களா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தவேண்டிய தலைப்புடன் துவங்கியிருக்கிறது ஜீவாவின் புதிய படமான ‘என்றென்றும் புன்னகை’.
பா.ம.க. கட்சித்தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனிடம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஜீவா கைநீட்டி அட்வான்ஸ் வாங்கியிருந்தார். படத்தை எப்போது துவங்கலாம் என்று தமிழ்க்குமரன்
கேட்கும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் கதை சரியில்ல, டைரக்டர் சரியில்ல என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்த ஜீவாவை, ‘முகமூடி’ துவங்கும்போதே அரசியல் ரீதியாக நெருக்கிப்பிடிக்க ஆரம்பித்தார் குமரன்.
‘’ எனக்கு இது பெரிய புராஜக்ட். சூர்யா பண்ணவேண்டிய படம் எனக்கு வந்திருக்கு. தயவு செய்து இந்த ஒருமுறை மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க’’ என்று காலில் விழாத குறையாக ஜீவா கெஞ்சவே ‘இதுதான் நீங்க குடுக்கிற கடைசி அல்வா. இதுக்கு மேல எதுவும் வச்சிக்காதீங்க’ என்று எச்சரித்து விட்டுக்கொடுத்தார்.
ஆனால் ஜீவாவின் கெட்ட நேரம் கவுதமின், ‘நீதானே என் பொன் வசந்தம்’ மற்றும் மிஷ்கினின் ‘முகமூடி’ யோ சொன்ன தேதிகளில் முடியவில்லை.
இவைகளை சற்றும் பொருட்படுத்தாமல் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெறுமனே த்ரிஷாவை மட்டும் வைத்து ஒருவாரப்படப்பிடிப்பை துவக்கிய தமிழ்க்குமரன் ,’’இன்னும் ஓரிரு வாரங்களில் ஜீவா வாலைச்சுருட்டிக்கொண்டு வந்து தன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டும். இனி ஒவ்வொரு நாளும் என் படம் தாமதமாவதால் ஆகும் எக்ஸ்ட்ரா பட்ஜெட் எல்லாம் ஈவு இரக்கமின்றி ஜீவாவின் சம்பள பாக்கியில் கழிக்கப்படும்’’ என்று அறிவித்துவிட்டாராம்.
படம் துவங்குறதுக்கு முந்தி சினிமாக்காரர் கொடுத்த அல்வாவை அவருக்கே திருப்பி தர அரசியல்வாதி ரெடியாயிட்டார். ஜெயிக்கப்போறது அவரா இவரான்னு விஜய் டி.வி. கோட்டு கோபிநாத்துகிட்ட யாராவது கேட்டுச்சொன்னா நல்லாருக்கும்.