சும்மா ஒரு முகஸ்துதிக்காக, நீங்க இன்னும் யூத்தாவே இருக்கீங்க என்று ஏகப்பட்டபேர் வாயால் கேட்கநேர்ந்து, அதையே சீரியஸாக எடுத்துக்கொண்டு, மீண்டும் கதாநாயகியாக, ஸ்ரீதேவி நடிக்கத்துணிந்த படம் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’.
அமிதாப்பை வைத்து இசைஞானி இளையராஜா இசையில் ’பா’ படத்தை இயக்கினாரே பால்கி என்ற பாலகிருஷ்ணன், அவரது மனைவி கவுரி ஷிண்டே முதல்முறையாக இயக்குனராக களம் இறங்க, நம்ம ‘வாமனண்’மற்றும் ’குளிர்100’ பொண்ணு ப்ரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபரிலேயே முடிந்துவிட்டது.
ஒரு குடும்பத்தலைவி தனது கணவரையும், பிள்ளைகளையும் குதூகலப்படுத்துவதற்காக திடீரென இங்கிலீஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்து அதனால் அவர் படும் அவஸ்தைகள், அப்படி இங்கிலீஸ் கற்றுக்கொள்வதால், அவரால் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் படும் அவஸ்தைகள். இவர்கள் அனைவரால் நாம் படப்போகும் அவஸ்தைகள் தான் படத்தின் கதைச்சுருக்கம்.
ஸ்ரீதேவியின் மங்காப்புகழை மனதில் வைத்தும், சுமார் 14 வருட சினிமாவாச கேப்புக்கு அப்புறம் அவர் நடித்திருக்கும் படம் என்பதாலும், படத்தை இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் ரிலீஸ் பண்ணும் எண்ணத்துடன் ஈராஸ் நிறுவனம் இப்படத்தை வாங்கியிருக்கிறது.
‘யோவ் டைட்டில்ல அஜீத் பேரு இருக்குன்னு படிக்க வந்தா, நீ ரொம்ப போரு?’
‘ப்ளீஸ் வெயிட்.
பால்கி குடும்பத்தினருடன் கொண்ட நெருங்கிய நட்பின் காரணமாக அமிதாப், இப்படத்தில் சுமார் மூன்று நிமிடங்களே இடம்பெறக்கூடிய காட்சி ஒன்றில் நடிகர் அமிதாப்பாகவே தோன்றுகிறார்.
இப்படம் தமிழில் வெளியாகும்போது, இதுவரை தமிழில் எந்தப்படத்திலும் தலைகாட்டாத அமிதாப் முதல் படம் ஒன்றில் மூன்றே நிமிடங்கள் வருவது அவருக்கு கவுரவம் செய்வதாகாது என்று கருதியும் , அந்த கேரக்டரில் தமிழ் பிரபலங்கள் யாராவது தல காட்டினால் படத்தின் ஓபனிங்குக்கு உதவும் என்ற சமூக அக்கறையுடனும், அந்தக்கேரக்டரில் தமிழில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ டீம் முழுக்க டிஸ்கஸ் பண்ணிப்பார்த்ததில் அல்டிமேட்டாக அஜீத் பெயரே வந்து நின்றதாம்.
உடனே தயாரிப்பாளர் பால்கி, அஜீத்தை தொடர்புகொண்டு தனது கோரிக்கையை எடுத்துரைக்க மூன்று நிமிடம் இடம்பெறவிருக்கும் ஒரு சீன்,ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 5 கோடி சம்பளம் கேட்டாராம் அஜீத்.
‘’எனக்கு திடீர்னு காதுல தூசி விழுந்திருச்சி.அதனால திடீர்னு காது சரியா கேக்கலை.நான் அப்புறமா கூப்பிடுறேன் சார்’’ என்றபடி அப்போதைக்கு விடைபெற்று, அவசர அவசரமாக தொடர்ந்து ஐந்து பிளேட் பாவ் பாஜி சாப்பிட்டாராம் பால்கி.
உங்க நடவடிக்கை கொஞ்சம் குழப்பமா இருக்கு பால்கி. எல்லாருக்கும் புரியிறமாதிரி எளிமையான ரியாக்ஷன் எதாவது குடுங்க.