கே:தன்னை குடிகாரி என்று கூறியதை ஒரு வாரத்திற்குள் வாபஸ் பெறாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று நடிகை ஊர்வசி தனது முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாரே?’ – ஜான்சன், பொள்ளாச்சி.
கி: உங்கள் கேள்வியை சற்றே திருத்திக்கொள்ளுங்கள். மனோஜ்.கே. ஜெயன்
சொன்னது ‘குடித்துவிட்டே கோர்ட்டுக்கு வந்தார் என்பது. ஊர்வசி சொல்ல விரும்புவது நான் வீட்டிலிருந்து கிளம்பும்போது குடித்துவிட்டு கிளம்பவில்லை. கோர்ட்டுக்கு வந்தபிறகுதான் குடித்தேன் என்பது.
இந்த இரண்டுக்கும் நடுவில் உள்ள லீகல் பாயிண்ட் புரியவேண்டுமென்றால், ஒரு நாலு ‘ரவுண்டு’ போட்டுவிட்டு யோசியுங்கள் புரியும்.
கே; தங்கர் பச்சான் இயக்கிவரும் ‘அம்மாவின் கைப்பேசி. நடிகை ரோகிணி இயக்கவிருக்கும் ‘அப்பாவின் மீசை’ இந்த ரெண்டு படங்களையும் பத்தி எனக்கு ஒண்ணு தோணுது. உனக்கு ஏதாவது தோணுதா கிளிப்பயபுள்ள? செந்தில்நாதன், விழுப்புரம்.
இவ்வளவு நாளும் தமிழனின் பேரைச்சொல்லியே, கிடைத்தவன் தலையிலெல்லாம் கிடார் வாசித்துக்கொண்டிருந்த தங்கர் பச்சானுக்கு திடீரென்று சர்வதேச அங்கீகார தாகம் ஏற்பட்டதன் விளைவே ‘அம்மாவின் கைப்பேசி’யாம். செல்போனின் மகத்துவத்தை என் படத்தில் சொல்லப்போகிறேன் என்கிறபோதெல்லாம் ‘செல்போன் கம்பெனியில வெயிட்டா சில்லறையை வாங்கிட்டேன் என்பது போலவே நமக்கு கேட்கிறது.
தங்கர் ‘அழகி’ ‘சொல்லமறந்த தன் கதை தவிர்த்து அரைடஜன் சாணி போட்டவர். அவரையும் முதல்படம் இயக்கப்போகும் ரோகிணியையும் ஒப்பிட்டு வேறு எதுவும் எனக்குத்தோணவில்லை. அப்படி ஏதாவது தோணினால் அந்த அம்மாவின் கைபேசி மூலமே உங்களை தொடர்புகொண்டு சொல்கிறேன்.
கே: சிநேகாவும் பிரசன்னாவும் அதுக்குள்ளயே பிரிஞ்சிட்டாங்களே? ஸ்ரீகாந்த், செம்பரம்பாக்கம்.
வாயில விரல சூப்பிக்கிட்டு இதுக்காகவே காத்திருந்த மாதிரியே தெரியுதே ஸ்ரீகாந்த். என்ன பண்றது உங்க பெயர் தோஷம் அப்பிடி.
பிரிஞ்சதெல்லாம் சப்ப மேட்டர். இன்னும் ஒரு மாசத்துல டைவர்ஸ் பண்ணப்போறாங்களாம். அடுத்த ஒரு மாசத்துல பிரசன்னா நமீதாவை கல்யாணம் பண்ண, சிநேகா அவரோட பழைய காதலரான சிங்கப்பூர் தொழிலதிபரை கல்யாணம் பண்ணப்போறாங்களாம்.
எல்லாம் ஜஸ்ட் ஃபார் துட்டு. இதுக்காக அவங்க ரெண்டுபேரும் ‘செத்துச்செத்துக்கூட விளையாட ரெடி. ஆர் யூ ரெடி ? நான் உங்கள அவங்க டீம்ல செத்துவிடுறேன்.
கே: நான் ஈ’ படம் பாத்ததிலருந்து டைரக்டர் ராஜமவுலி பத்தி தெரிஞ்சிக்க துடிக்கிறேன்? மோகன்ராஜ், விருதுநகர்.
எனக்கெல்லாம் படம் பார்த்த உடனே சென்னையிலருந்து ஹைதராபாத்துக்கு கேட்கும்படி மீரே டைரக்டரண்டி’ என்ற உரக்க வாழ்த்தவேண்டும் போலிருந்தது.
நீங்க மட்டுமில்ல நம்ம தமிழ்சினிமா ஜாம்பவான்ஸ், அதுலயும் முக்கியமா முன்னூறு நாள், முன்னூறு ரோல் கோஷ்டிகள் அவசியம் அவரைப்பத்தி தெரிஞ்சிக்கனும்.
‘ராட்ச்ஷன்’ ங்கிற தலைப்புல நம்ம ’இணைய தல’ யுவகிருஷ்ணாவோட இந்தப்பதிவை படிங்க…
http://www.luckylookonline.com/2012/07/blog-post_8065.html