38 தமிழ் உறவுகளின் உயிர்களைப் பலிகொண்ட சிவகாசி வெடிவிபத்து குறித்து நம் கோடம்பாக்க ஆசாமிகள் ஒரு இரங்கல் அறிக்கை கூட தர முன் வராத நிலையில், கேரளாவிலிருந்து மாபெரும் உதவிக்கரம் நீட்டி, தான் எவ்வளவு பெரிய மனிதன் என்பதை நிரூபித்திருக்கிறார் மலையாள சூப்பர்ஸ்டார் ம்ம்முட்டி.
தீவிபத்தில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் சிவகாசியிலும்,மதுரையிலும் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், கேரளா, பாலக்காடு அருகே ஒற்றப்பாலம் என்னும் இடத்தில் உள்ள ‘பதஞ்சலி ஆயுர்வேத மருந்து தொழிற்சாலைக்கு, தீக்காய மருந்துகள் வேண்டி ஆர்டர் வந்தது.
அந்த முதல்கட்ட ஆர்டரின் மொத்த மதிப்பு 35 லட்சம் ரூபாய். நிர்வாகிகள் உடனே அந்த ஆர்டர் வந்த தகவலை தங்களது முதலாளிக்கு தெரிவிக்கவே, தமிழ் நாட்டு ஜனங்க என்னை எப்படியெல்லாம் ஆதரிச்சவங்க. அதுக்கு நன்றிக்கடன் செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடச்சிருக்கு. அதனால மருந்தை மட்டும் அனுப்புங்க. கண்டிப்பா பணம் வாங்காதீங்க. அடுத்த கட்டமா மருந்து ஆர்டர் வந்தாலும் கூட இலவசாமவே அனுப்புங்க’ என்று உத்தரவிட்டாராம்.
கேட்பவர்களின் கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைக்கும் அந்த முதலாளி சாட்சாத் மலையாள சூப்பர்ஸ்டார் ம்ம்முட்டியேதான்.
கோடிகளில் புரளும் நம் கோடம்பாக்க கோமான்கள், தங்களுக்கு வந்த பணத்தில், வெடிமருந்து தொழிலாளர்கள் சினிமா பார்த்த பணமும் உள்ளது’ என்பதை ஒரு கணமாவது நினைத்துப்பார்ப்பார்களேயானால், மம்முட்டி அளவுக்கு வேண்டாம், அட்லீஸ்ட் ஒவ்வொரு தனிநபரின் சிகிச்சை செலவையாவது ஏற்றுக்கொண்டிருக்கலாமே?