’ட்விட்டரா, அப்பிடின்னா அது எதாவது மார்க்கெட்டுக்கு புதுசா வந்திருக்க ஸ்வெட்டரா?’ என்று கேட்கக்கூடிய அப்பாவி நட்சத்திரங்களுக்கு மத்தியில், சித்தார்த் மாதிரியான ஒரு சில நட்சத்திரங்கள் ட்விட்டரே கதி என்று கிடக்குற கதைகளும் இன்னொரு பக்கம் உண்டு.
தற்போது எந்த லொகேஷனில், யாருடன் என்ன படப்பிடிப்பில் இருக்கிறார். அடுத்து யாருடன் இணைந்து படம் பண்ணபோகிறார், தான் சைட் அடித்துக்கொண்டிருக்கும் பெண்கள் லிஸ்ட் என்பது உட்பட தனது அத்தனை செயல்பாடுகளையும் இடைவிடாது ‘அப்டேட்’ பண்ணி வரும் சித்தார்த்துக்கு ட்விட்டரில் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிக,ரசிகைகள் உண்டு.
நேற்று அந்த எண்ணிக்கை ஐந்து லட்சங்களைத்தொட்டு, தென்னிந்தியாவில் அதிக ஃபாலோயர்களைக்கொண்ட நட்சத்திரம் என்ற அந்தஸ்தை அடைந்து, ஃபாலோயர்கள் பரந்து விரிந்திருக்கிற நாலாயிரம் திசைகள் நோக்கி நன்றி தெரிவித்தார் சித்தார்த்.
அலிபாபாவும் அவரது நாற்பது ஃபாலோயர்களும் மாதிரி, நம்ம நட்சத்திரங்களும் அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கையையும் ஒரு லுக் விடலாமா?
அமிதாப் பச்சன் 39,59,656
ஷாருக் கான் 28,82;076
அமீர்கான் 28,12,628
ஏ.ஆர்.ரகுமான் 14,78,035
ஆர்.மாதவன் 4,18,530
ரான்கோபால்வர்மா 4,03256
ஸ்ருதிஹாஸன் 3,21,922
யுவன் ஷங்கர்ராஜா1,53,836
த்ரிஷா 3,58,339
தனுஷ் 2,38,538
ஷ்ரேயா 1,85561
டாப்ஸி 1,35,805
பாடகி சின்மயி 89,931
நமீதா 53,332
செல்வராகவர் 10,858
சிம்பு 599
ஆயா கலைகளிலும் வலுவா இருக்கிற சிம்பு, ட்விட்டரில் மட்டும் ஏன் ஒரு சொம்பு ரேஞ்சில் இருக்கிறார் என்பதுதான் விளங்கவில்லை.