திரையிட்ட 500 செண்டர்களிலும் நான்ஸ்டாப்பாக ‘முகமூடி’ ப்ளாக்கில் போவதைத்தொடர்ந்து, , இதன் அடுத்த நான்கு பாகங்களையும் தொடர்ச்சியாக இயக்கித்தரச்சொல்லி, யூ.டி.வியை மோஷன் போகச்செய்யும் தனஞ்செயன் மிஷ்கினை வற்புறுத்தி வருவதாக தகவல்.
இச்செய்தி லோக்கல் மீடியாக்கள் மத்தியில் வெகு சஸ்பென்சாக வைக்கப்பட்டிருப்பதால், நேற்று நள்ளிரவில் லண்டனில் ரகஸியமாக வசிக்கும் ஒரு பி.சி.பி.சி.ஓ.சி. நிருபர் ஒருவரை தொடர்பு கொண்டோம்.
’இதைப் பத்தி வேற யார்கிட்டயம் மூச் விடக்கூடாது’ என்று செல்போன் மூலமாகவே சத்தியம் வாங்கிக்கொண்டு அவர் செப்பியதாவது ;
‘’ஜீவா மிஷ்கினின் சம்பளம், தயாரிப்பு இன் சார்ஜ் தனஞ்செயனின் பேட்டா,சப்போர்ட்டா எல்லாம் சேர்த்து சுமார் 16 கோடியில் தயாரான ‘முகமூடி’ கடந்த வெள்ளியன்று படம் ரிலீஸாவதற்கு ஒரு மணிநேரம் முன்பே, [ கார்த்தியின் ‘சகுனி’ உள்ளிட்ட ] தமிழ்சினிமாவின் பழைய ரெகார்டுகள் அனைத்தையும் தவுடு தின்ன வைத்து, 32 கோடி வசூலைத்தாண்டியதாம்.
இந்த வசூல்வெள்ளம், படம் பாத்து மவுத் ஆகாத, மக்களின் மவுத் டாக்கும் கன்னாபின்னவென்று இருந்ததால், அடுத்தடுத்த காட்சிகளில் குய்யோமுறையோ என்று அதிகரித்து, இன்னும் சில தினங்களில், ஆகமொத்தம் ஒரு எழுநூறு முதல் எண்ணூறு கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடுவுல நார்வே, சுவீடன் மாதிரி நாட்டுகளுக்குப்போய் வேற ஒரு புது ‘நாட்’டோட படம் பண்ணுவமே என்று ரிலீஸுக்கு அப்புறமாக தலையில் முக்காடு போட்டபடி தலைமறைவாக இருந்த மிஷ்கினை, தனது ‘எக்ஸ்ட்ரா லார்ஜ்’ மூளையால் தேடிக்கண்டுபிடித்த தனஞ்செயன், மிஷ்கினிடம், ‘இத இத இதத்தான் உங்க கிட்ட நான் எதிர்பார்த்தேன். சூப்பர் .கலக்கிட்டிங்க. இனி, எங்கள விட்டு நீங்க எங்கேயும் போக முடியாது. இந்த ‘முகமூடி’யோட அடுத்த 4 பாகங்களுக்கு லம்பா முப்பது கோடி அட்வான்ஸ புடிங்க. உடனே ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க. சப்போஸ் ஜீவா கால்ஷீட் ப்ராப்ளம் இருந்தா, அந்த முகமூடிய எடுத்து நீங்க மாட்டுங்க. உங்களோட மறுமுகத்தை ஜனங்களுக்கு காட்டுங்க’’ என்று மிஷ்கினை துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறாராம்.
‘ஒரு மூடி’யை பாத்துட்டே இருக்குற அத்தனை முடியையும் பிச்சிக்கிட்டோம். இனி ஒரு நாலு மூடி’யா?
2012-ல உலகம் அழியப்போகுதுன்னு ஒரு வதந்தி உலவுதே, அது நிஜமாவே நடந்தா நல்லாருக்கும்னு உங்களுக்கு தோண ஆரம்பிச்சிருக்குமே?’