அ - குறும்படம்

மகேஷ் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இந்தக் குறும்படத்தின் கதையை ஒரு சிறு காட்சி (scene)என்று எடுத்துக்கொள்ளலாம்.

கிராமத்துச் சூழலில் நடக்கும் ஒரு கொடூர யதார்த்தத்தை கொஞ்சம் பாரதிராஜா ஸ்டைலில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

மூன்று வருடங்களாக இடுப்பொடிந்து படுத்த படுக்கையாய் கிடக்கும் தாய்,

தாய்க்கு மருந்து வைத்தியம் பார்ப்பதிலேயே வருமானமனைத்தையும் செலவழிக்கும் குடிசை வீட்டு உழைப்பாளி மகன். வறுமையில் கஷ்டப்படும் அவனது குடும்பம். மூன்று வருடங்களுக்குப் பின் தாயை இனி மேலும் தொடர்ந்து பார்த்துக் கொள்ள வழியில்லாததால் விஷம் கொடுத்து கொல்லவேண்டிய நேரம் இது…

தாய் மீது அவன் கொண்டுள்ள பாசத்திற்கும், அவனது யதார்த்த வாழ்வின் கையாலாகாத நிலைக்குமிடையே நடக்கும் அவனது மனப்போராட்டத்தையும் பதிவு செய்யும் படம்.

முடிவில் அந்தத் தாய்க்கு நிகழ்ந்தது என்ன என்று இந்த 5 நிமிட குறும்படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இயக்குனரின் திரைக்கதையும், வசனங்களும் மற்றும் இயக்கமும் அருமை. கிராமத்துக் கதை என்பதாலேயே பாரதிராஜாவின் தாக்கம் தெரிகிறதோ என்னமோ?

படத்தின் வசனங்கள் கொஞ்சம் கிராமியத்தனம் கலந்த நாடகத்தன்மை கொண்டிருக்கின்றன. இயக்குனர் நடிகர்களை நடிக்க வைப்பது முதல், காட்சிகள் வைப்பது வரை முதிர்ச்சியுள்ளவராகத் தெரிகிறார்.

நடிகர்களில் மகனாக வருபவர் நடிப்பு மட்டும் சில இடங்களில் பிசிறு தட்டுகிறது. மற்ற எல்லோரது நடிப்பும் அருமை. மனைவி, மாமியார், அம்மா என்று எல்லோரும் அருமையாய் நடித்திருக்கிறார்கள்.

படம் பேசும் உணர்வுபூர்வமான விஷயத்திற்கு ஏற்ற இசை.
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மற்றும் எடிட்டிங் எல்லாம் கனகச்சிதம்.

படத்தின் இறுதி ஷாட்டில் தெரியும் வாழ்வின் யதார்த்தம் நெஞ்சை அறைகிறது.

‘அ’வை கீழே அல்லது இங்கே பாருங்கள்.

–ஷாலினி ப்ரபாகர்.

எழுத்து, இயக்கம் – மகேஷ் பெரியசாமி
தயாரிப்பு ம – ரமேஷ் பாரதி. ஒளிப்பதிவு – சுரேஷ், நாச்சியப்பன்.
இசை – ஜோகன், படத்தொகுப்பு – ரமேஷ் பாரதி
ஒலிப்பதிவு – இளந்தமிழன், நிர்மல்.
இணை இயக்கம் – இளையா. ஒலிப்பதிவு உதவி – குமாரசாமி.
அசோசியேட் எடிட்டிங் – சிவராம், செல்வா, யெழில்.
சிறப்பு சப்தம் – ரவி ரமேஷ். ஒருங்கிணைப்பு –சௌந்தர்.
அலுவலக உதவி – ஆர்.முனிரத்தினம் ரெட்டி
வெளிவந்த ஆண்டு – 2010. கலைஞர் டி.வியில் நாளைய இயக்குனர் போட்டியில் கலந்து கொண்ட படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.