வருஷத்துக்கு 10 படங்கள் கூட ஓடாத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 24 படங்கள் வெளியானதாக படித்தேன். இப்படி படம் எடுக்க வருபவர்களின் கதை, திரைக்கதை என்ன கிளியாரே?’ மாதவன், நாகர்கோயில்.
படம் எடுக்க வருபவர்கள் எல்லாம் படம் எடுக்க வருபவர்கள் அல்ல.குறுக்கு வழியில் சம்பாதித்ததை இங்கே வந்து கொட்டி குஷாலாக இருக்க ஒரு கோஷ்டி வருகிறது. இன்னும் சிலருக்கு பணம் மட்டும் போதாமல் ’பேர்’ ஆசை வேர் விடுகிறது. அது மட்டுமின்றி ‘வேறு’ ஆசைகளுடன் இங்கே வருபவர்கள் அதிகம்.
அவ்வகையான பார்ட்டிகள்தான் குப்பையான படங்களை எடுத்து குவிக்கிறார்கள்.
என்னை நடிக்க அழைக்காமல் வீட்டில் உட்கார வைத்ததன்மூலம் ‘நஷ்டம் எனக்கில்லைண்ணே” என்கிறாரே வைக்கோல்புயல் வடிவேலு?’ முருகேசன், வேலூர்.
அப்ப, அப்பிடியே வீட்டுல உட்காந்தே ‘சாப்பிட்டுக்கிட்டு ரிடையர் ஆயிடுங்கண்ணே. உங்களுக்கு புண்ணீயமாப்போச்சி.
கிளியாரே நடிகை அஞ்சலி வீட்டில் வேலைக்காரனாக சேர்ந்து, கொஞ்ச நாளில் வீட்டுக்காரனாக மாறுவதுபோல் பகல் கனவு கண்டேன். பலிக்குமா?’ மணிகண்டன், தாம்பரம்.
வேலைக்காரனாக இருக்கும்வரை ஆபத்தில்லை. ஒருவேளை உங்கள் கனவு பலிக்கும்படி வீட்டுக்காரனாகிவிட்டால் விபரீதமான பல பின் வளைவுகளையும் விளைவுகளையும் சந்திக்கவேண்டி வரும் சம்மதமா மணிகண்டரே?
அதுசரி, நியாயமா இந்தக் கேள்வியை , நீங்க உங்கள கனவு காணச் சொன்ன அப்துல் கலாமுக்குத்தானே அனுப்பியிருக்கனும்? தூக்கக் கலக்கத்துல இப்பிடி அட்ரஸ் மாறி வந்துட்டீங்களே?
தமிழ்ப்படங்கள் அதிக அளவில் வேற்றுமொழிகளில் ரீ-மேக் செய்யப்படுவது எதைக்காட்டுகிறது? சுப்பிரமணியன், சிவகாசி.
மிளகாய்ப் பழ சாமியார்களும், வாழைப் பழ சாமியார்களும் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை.
ஓ.கே. ஓ.கே’ உதயநிதி தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை அறிவிக்காமலே இருக்கிறாரே? கருணாமூர்த்தி, விழுப்புரம்.
இவ்வளவு நாட்களாக ஓடும் குதிரை ஒன்றுக்காக காத்திருந்தார் உதயநிதி. ‘சுந்தரபாண்டியன்’ படம் இயக்கிய பிரபாகரன் என்ற குதிரையை சில தினங்கள் முந்திதான் நல்ல விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.
அவ்வப்போது ஆண்ட்டி ரோல்களில் வந்து கிளுகிளுப்பூட்டிய என் கனவு அண்ணி கிரண் எங்கே கிளியாரே, ஆளையே காணோம்? நாகராஜன், நெல்லை.
கடந்த வாரம் ஒரு நாள் பரங்கிமலை மேலே சன்பாத் எடுத்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக உங்க கனவுப்..ன்னி கிரணை சந்தித்தேன்.
உங்க ஆண்ட்டி உலகமே வெறுத்த ஆண்டி மூடில் இருக்கிறார். இனிமே சினிமாவுல அவங்க நடிச்சா நீங்க ஒன் பாத் போயிருவீங்க. அதனால கிரணை மனசுல இருந்து டெலீட் பண்ணிட்டு மத்த ஆண்ட்டிகளோட மனசார வாழுங்க. மங்களமுண்டாகட்டும்.
மிஷ்கின் அடுத்து என்ன செய்யப்போகிறார்? பால்ராஜ், புதுவை.
‘முகமுடி’ என்ற நொந்த படத்தில் வாங்கிய சம்பளப்பணத்தில், சொந்தப்படம் எடுக்கப்போவதாக, வந்தவாசி வழியாக ஒரு தகவல்.