கே; இதுவரை பிரகாசிக்காமல் போன பாக்கியராஜின் வாரிசு சாந்தனு, தங்கர் பச்சானின்அம்மாவின் கைபேசிக்கு அப்புறமாவது பேசப்படுவாரா கிளியாரே?’ ஞானசம்பந்தன், கோவை.

கி ; இதற்கு முன்பு தங்கரின் படத்தில் நடித்த சேரன், பார்த்திபன்,சத்யராஜ், நரேன்,மற்றும் தங்கர்பச்சான் போன்றவர்களின் தற்போதைய நிலவரம் தெரிந்திருந்தும் இப்படி ஒரு மூடநம்பிக்கையா?

’கிடைக்கிற சம்பளதுக்கு வருஷத்துக்கு ஒன்பது படத்துக்கு குறையாம

நடிச்சிட்டுருந்தேன். என்னைக்கு தங்கர்பச்சானோட ‘ஒன்பது ரூபா நோட்டு’ங்குற படத்துல நடிச்சேனோ, அன்னைக்கோட டைரக்டர்களும் புரடியூசர்களும் நம்ம தெருப்பக்கம் கூட வர மாட்டேங்குறாங்க’ சத்யராஜின் மைண்ட்வாய்ஸ்.

கே: கிளி மாம்ஸ், எத்தனையோ நடிகைகள் வந்த ஒண்ணு ரெண்டு வருஷத்துல ரிடையர் ஆயிடுறாங்க. நம்ம த்ரிஷா மட்டும் மார்க்கட்டு டவுணாகாம பதினோரு வருஷமா தாக்குப் புடிக்கிறது எப்பிடி? தனபாலன், பொள்ளாச்சி.

கி: லேட்டஸ்டா த்ரிஷா ’டாட்டு’ குத்தின இந்த படத்தை, குத்துன இடத்தை, டாப் ஆங்கிள் போட்டு, வச்ச கண்ணு வாங்காம ஒரு பத்து நிமிஷம் பாருங்க. உங்க கேள்விக்கு பதில் தன்னால விளங்கும்.

கே: நடிகர் பரத்,பரத்துன்னு ஒருத்தர் இருந்தாரே அவர் என்னதான் ஆனார்?’ மனோகர், தஞ்சாவூர்.

டைரக்டர் சசி,சசின்னு ஒருத்தர் இருந்தாரே அவர் கூட ‘555’ன்னு ஒரு படம். மூனு வருஷமா முக்கிக்கிட்டு இருக்காங்க. படம் டெலிவரியாகுற வழியைக்காணோம்.

அப்புறம் கோமாவுல இருந்த பேரரசுவோட ‘திருத்தணி’க்கும் லேசா நினைவு திரும்பிக்கிட்டிருக்கிறதா தகவல்.

சரி வுடுங்க. திவ்யா இல்லைன்னா த்ரிஷா மாதிரி, பரத் இல்லைன்னா சரத். [நன்றில்லாம் வேண்டாம், ராதிகா மேடம்]

கே: ‘நான்ஹீரோ விஜய் ஆண்டனி, நடிகராக வெற்றி பெற்றுள்ளாரா? அடுத்து படங்கள் எதுவும் ஒப்பந்தமாகியுள்ளதா கிளியாரே?’ விஜயகுமார், நெல்லை.

கி: அதே இயக்குனருடன் ‘திருடன்’ என்ற படத்தில், மறுபடியும் மனைவியின் தயாரிப்பிலேயே நடிக்கவிருப்பதாக தகவல். இதிலிருந்து அவர் வீட்டளவில் நடிகராக வெற்றி பெற்றுள்ளார் என்பதை அறியமுடிகிறது.

கே: தமன்னா, இப்படி அநியாயமாக, தமிழை மறந்து இந்திக்கு பறந்துபோய்விட்டாரே? செல்வா, திருச்சி.

கி: இதுக்கெல்லாமா அழுவாங்க செல்வா?

‘தமன்னா போயின் நயன் தாராவை லவ்வுக, அஃதிலார்

காஜல் அகர்வாலைக் காமுறுக ன்னு காமத்துப்பால்ல வள்ளுவர் எழுதிவச்சதை படிச்சதில்லையா நீங்க.

கிளியாரின் முந்தைய பதில்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.