கே; நமது கேப்டனின் வாரிசு சண்முக பாண்டியன் கிரகப்பிரவேசம் ஸாரி திரையுலகப்பிரவேசம் என்ன ஆச்சி கிளியாரே? தனசேகரன், கோவில்பட்டி.

புது டைரக்டரை வைத்துக்கொண்டு இரட்டை ரிஸ்க் எடுக்க கேப்டன் தயாராக இல்லை. முருகதாஸ் மாதிரி முன்னணி இயக்குனர்களிடம் போனால், கேப்டனே மூர்ச்சையடையும் அளவில் சம்பளம் கேட்கிறார்கள்.

இடையில் ஜிம், ஸ்விம்மிங், குதிரையேற்றம், கழுதையேற்றம் என்று ஆய கலைகளும் கற்று பாய தயாராக

இருக்கிறார் சின்ன கேப்டன்.

காத்திருங்கள். எந்த நேரமும் சின்ன கேப்டனின் சவாரி ஸ்டார்ட் ஆகலாம்.

கே சமீபத்திய வரவுகளில் நம்பிக்கையளிக்கும் கிளியாக உங்களுக்கு தெரிவது யார் ;? சுதா, வெள்ளாங்கோயில்.

நேற்றுதான் ’18 வயசு’ படம் பார்த்தேன். முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே அதன் நாயகி காயத்ரிக்கு 5 படங்கள் கமிட் ஆன ரகஸியம் புரிந்தது.

எங்கள் இருவருக்குமான வயசுப்பொருத்தத்தினாலோ என்னவோ, காயத்ரியை முதல் ஃப்ரேமில் பார்த்ததுமே என் மனசை அள்ளிக்கொண்டார். நெஞ்சத்தை கிள்ளிக்கொண்டார்.

இனி, கிளியாரின் லட்சியம்… அடைந்தால் காயத்ரி. அடையாவிட்டால் பிரம்மச்சாரி.

கே ; தமிழ்சினிமாக்காரர்கள் எனக்கு வாய்ப்பு தராமல் இருட்டடிப்பு செய்கிறார்கள் என்கிறாரே பத்மப்ரியா? செல்வக்குமார், பொள்ளாச்சி.

அவர் தன்னை எடுத்து வெளியிடுகிற ஸ்டில்களைப் பார்க்க நேரும் டைரக்டர்களெல்லாம் கழுத்துச்சுழுக்கா ல் அவதிப்படுகிறார்கள். நட்டுவாக்காலி போஸ்களை குறைத்துக்கொண்டால், எதிர்காலத்தில் அக்கா, அண்ணி போன்ற சில ஃபன்னி ரோல்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

கே: ரஜினி நடித்த தில்லுமுல்லுவில் சிவாவா? இந்தக்கொடுமையையெல்லாம் இருந்து பார்க்கவேண்டுமா?? ரஜினி சிவா, அயனாவரம்.

அவசியமில்லை. நானே ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்பதால், அவர் நடிப்பை காப்பி அடிப்பதையோ, அவருக்காகவே ரசிக்கப்பட்ட சில காட்சிகளை ரிபீட் செய்வதையோ நாங்கள் விரும்பவில்லை. கதையில் நிறைய மாற்றங்கள் செய்கிறோம்’ என்கிறார் மிர்ச்சி சிவா.

கே: கிளி மாம்ஸ் த்ரிஷாவின் இந்த மூன்று எக்ஸ்பிரசன்களையும் சற்றுமுன் ஒரு இணையதளத்தில் பார்த்தேன். என்னமோ நடக்குதுன்னு தெரியுது. ஆனா என்ன நடக்குதுன்னு தெரியலை. நீயோ பழுத்த அனுபவஸ்தன். எனக்கு கொஞ்சம் விளக்க முடியுமா? சபேஷ், வண்ணாரப்பேட்டை.

கி: நானும் சுமார் மூனு மணி நேரமாக குப்புற மல்லாக்க மற்றும் குண்டக்க மண்டக்க படுத்து யோசித்துப் பார்த்ததிலிருந்து விளங்கிக்கொண்டதாவது; ‘என்னமோ நடக்குது. ஆனா என்ன நடக்குதுன்னு வெளங்கலை.

முந்தைய கிளியார் பதில்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.