தற்போது பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் விஷ்ணுவர்த்தன் படத்துக்குப் பிறகு, நாகிரெட்டி நிறுவனம் தயாரிக்க ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்க இருப்பது பதினோரு மாத பழைய செய்தி.
ஆனால் இந்தப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பது அனுஷ்கா அல்ல என்பதுதான் பதினோரு மணிநேரத்துக்கு முந்தைய செய்தி.
‘சிறுத்தை’ சிவாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற அடிப்படையில் அனுஷ்காதான் அடுத்த அஜீத் படத்தின் ஹீரோயின் என்பதுபோல செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
சிவாவும் நேற்றுவரை அனுஷ்காதான் ஹீரோயின் என்ற எண்ணத்தில்தான் இருந்து வந்திருக்கிறார். இது குறித்து இதுவரை கருத்து எதுவும் சொல்லாமலிருந்த ‘தல’ நேற்று சிவாவை தொலைபேசியில் அழைத்து, ‘சமீபத்துல ‘தாண்டவம்’ கேலரி ஸ்டில்ஸ் பார்த்தேன். அனுஷ்கா ரொம்ப வயசாகி எனக்கு அக்கா மாதிரி இருக்காங்க. ஏதோ நம்ம படத்துக்கு கால்ஷீட் குடுக்குறதுக்காகவே ஏகப்பட்ட படத்தை, அவங்க தியாகம் பண்ற மாதிரியும் ஒரு பில்ட்-அப் தெரியுது. கொஞ்சம் வெயிட் பண்ணி நாம வேற ஹீரோயின் பாத்துக்கலாம். இப்போதைக்கு நீங்க கன்ஃபர்ம் இல்லைன்னு உடனே அனுஷ்காவுக்கு இன்ஃபார்ம் பண்ணிருங்க பாஸ்’ என்றாராம்.
வேறுவழி? மனசுக்குள் குவா குவா’ என்று அழுதபடி அனுஷ்காவுக்கு தகவலை சொன்னாராம் சிவா.
தாய் சொல்லையும் ’தல’ சொல்லையும் தட்ட முடியுமா?
ஒரு முக்கிய பின் குறிப்பு: இதுவரை பெயரிடப்படாமல் இருந்த விஷ்ணுவர்த்தன் படத்துக்கு அநேகமாக அஜீத்தின் ‘கர்வம்’ என்று பெயர் சூட்டப்படலாம் எனத்தெரிகிறது.