இந்ததீபாவளியை, நொந்த தீபாவளி ஆக்கியே தீருவது, என்று பாலா முடிவெடுத்து, தனது ‘பரதேசி’ யை தீபாவளி ரிலீஸாக அறிவித்தபோதே, பலகாரம் சாப்பிடும் ஆசை, பல காததூரம் போன நிலையில், தமிழனுக்கு பட்ட மண்டையிலேயே படும் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்து நிரூபிக்கும் விதமாக, தங்கர்பச்சானின் ‘அம்மாவின் பரதேசி …ச்சீய்ஸாரி ‘அம்மாவின் கைபேசி’ யும் தீபாவளிக்குதான் ரிலீஸ் என்று நம்நெஞ்சில் தீயை வைக்கிறார் திங்கர்.
இவை இரண்டுமே முழுநீள அழுகாச்சி படங்கள் என்பது ஒருபுறமிருக்க,
பாலா ஒன்றிரண்டு முறை தேசிய விருது வாங்கியதை ஜிஞ்சர் பச்சானால் ஜீரணிக்க முடியவில்லையாம்.
அதனாலேயே ‘இந்த ஏங்க என்னங்க நடக்குது இங்க?’ பாலாவின் ‘பரதேசி’யுடன் நேருக்கு நேர் மோதி ரெண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம்.
என்னோட பழைய படத்துக்கு மியூசிக் போட்ட இசையமைப்பாளருங்களால தான், நான் சர்வநாசத்துக்கு.. ஸாரி, சர்வதேசலெவலுக்கு [..ச்சே, இவரப்பத்தி எழுதுறப்ப மட்டும் ஏன் ஓவரா டங் ஸ்லிப்பாகுதுன்னு தெரியலையே?] போக முடியலை. என் அம்மாவின் கைபேசி’ ஆடியோ ரிலீஸாகட்டும் அப்புறம் பாருங்க’’ என்று தங்கர் தொடை தட்டினார் அல்லவா?
இதுவரை அந்த பாடல்கள் கேட்ட இருவது பேரில், பத்தொன்பது பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மீதி ஒருத்தர் மட்டும் ஓலப்பாய்ல நாய் மோண்ட மாதிரி ஓயாம பேசிக்கிட்டே அலையிறாரு.
என்னங்க பத்தொன்பது பேருக்கு தொத்தின டெங்குல, டங்கர் மட்டும் எப்பிடி தப்பிச்சாருன்னு பாக்குறீங்களா?
கொசுவை இன்னொரு கொசு கடிச்சா ஒண்ணும் ஆகாதுங்க.