’துப்பாக்கி’ ஆடியோ ரிலீஸ் தினத்தன்று நடந்த சம்பவம் இது. மேட்டர் கொஞ்சம் லேட்டர் என்றாலும் கூட வெரி ஹாட்டர்.
’ து’ ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டுவிழா நடந்து முடிந்தவுடன் சானல்காரர்கள் தனியாக விஜயை வைத்து ஷூட் பண்ண ஆரம்பித்தார்கள்.
விஜய் தன் பட புரமோஷனுக்கு வரக்கூடிய இந்த மாதிரி நேரத்தை, சில சானல் சாணக்கியர்கள், தங்கள் சுயநலத்துக்கும் பயன்படுத்திக்கொள்வார்கள்.
எப்பிடி? எப்பிடி?’.’ எதுக்கு இத்தனை எப்பிடி?? அப்பிடி.
அதாகப்பட்டது, நேயர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லச்சொல்லி, அடுத்து விஜயைத்தொடர்புகொண்டால், ‘நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர், தீபாவளி வாழ்த்துச்சொல்லும் மூடிலேயே இல்லை’ என்ற மோடில் அவரது செல்போன் இருக்கும் என்பதால், இப்படி கிடைத்த கேப்பிலேயே, தீபாவளி, பொங்கலுக்கெல்லாம் சேர்த்து கெடாவெட்டிக்கொள்வார்கள்.
அவ்வாறே அன்று துப்பாக்கி தொடர்பான பேட்டிகள் முடிந்து, ‘சார் எங்களுக்கு ஒரு தீபாவளி வாழ்த்து ’பைட்’ எடுத்துக்குறோம் என்று ஒவ்வொருவராக நச்சரிக்க ஆரம்பிக்க, இறுதியில் பொறுமையிழந்த விஜய், ஒரு சேனல் நிருபரைப் பார்த்து, ‘’ எங்கிட்ட தீபாவளி ‘பைட்டு’ பொங்கல் ‘பைட்டுன்னு, இத்தனை ‘கடி’ எடுக்குறீங்களே. இதே கடியில ஒரு கடியாவது உங்களால அஜீத் கிட்ட வாங்க முடியுமா? எங்க போய் இதே மாதிரி அஜீத் கிட்ட பைட் வாங்கிப்பாருங்க’ என்றபடி பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்துவிட்டார்.