வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸாகவிருக்கும் ‘க்ளௌட் அட்லஸ்’ ஹாலிவுட் திரைப்படத்தைப் பற்றி இப்படிக் கூறியிருப்பவர் அதில் நாயகியாக நடித்திருக்கும் ஹாலி பெர்ரி (Halle Berry).
மேலும் அவர் கூறுகையில்,
“இப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் ஒரே ஆன்மாவின் வெவ்வேறு பிறவிகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்த ஆன்மாக்களின் வெவ்வேறு பிறவிகள் பற்றிய ஆறு கதைகளை படம் சொல்கிறது. இது போன்ற மறுபிறவி விஷயங்கள் இந்திய புராணக் கதைகளின் தன்மையை ஒத்திருக்கின்றன. இந்திய புராணக்கதை ஒன்றில் விஷ்ணு என்கிற கடவுளின் ஏழாவது அவதாரமாக ராமர் என்கிற கதாபாத்திரம் இருக்கும். இதே போல வேறு பிறவிகளும் விஷ்ணு என்கிற கடவுளுக்கு இருக்கும். இது போன்ற விஷயங்களை ஹாலிவுட்டில் சில படங்கள் கையாண்டிருக்கின்றன.”
இப்படத்தின் ஒரு காட்சியில் ஹாலி பெர்ரி இந்திய ஸ்டைலில் சேலை அணிந்து கூட நடித்திருக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர்கள் வாக்கோவ்ஸ்கி ப்ரதர்ஸ் (Wachowsky Brothers) என்றழைக்கப்படும் ஆண்டி(Andy) மற்றும் லானா(Lana) வாக்கோவ்ஸ்கி என்கிற அண்ணன் தங்கை ஆவார்கள். இவர்கள் ‘மேட்ரிக்ஸ்’ எனப்படும் படத்தின் மூலம் புகழடைந்தவர்கள். இந்த மேட்ரிக்ஸில் கூட இந்திய தத்துவம் சம்பந்தமான உரையாடல்கள், மாயை பற்றிய விளக்கங்கள் வந்திருக்கின்றன.
இந்தியாவிலிருக்கும் மக்களோ மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேடி ஓட அங்கிருப்பவர்கள் சிலருக்கு பழைய இந்திய புராணங்கள் பெரிதாகக் கண்ணில் படுகிறது.
நிஜமாகவே நம் புராணக் கதைகள் படிப்பதற்கு ஹாரி பாட்டரை விட மிக த்ரில்லிங்காகவும், கற்பனை வளம் நிறைந்ததாகவும் இருக்கும். உதாரணமாக மகாபாரதத்தில் வரும் எண்ணிலடங்கா கிளைக் கதைகளைச் சொல்லலாம்.
படித்துப் பாருங்கள்.