ஆந்திர அரசின் பெருமை மிகு ‘நந்தி’ விருதை ‘ராமாயணம்’ படத்தில் சீதாவாக நடித்ததற்காக நம்ம நயன் தாரா வாங்கியிருக்கிறார். பெரும்போட்டிகளுக்கு மத்தியில் சிறந்த நடிகை விருதை வென்றதை விட வேறொரு காரணத்துக்காக, அவர் அதிக நெகிழ்ச்சியாக இருந்தார்.
‘நான் என் வாழ்நாளில் மறக்கமுடியாத படம் ‘ராமாயணம்’. அதன் படப்பிடிப்பில் இருந்த நாட்களிலெல்லாம், ஒரு அதிதீவிர பக்தையாக விரதத்தில்தான் இருந்தேன் என்பது யூனிட்டில் இருந்த அனைவருக்குமே தெரியும். இந்த விருது எனது சின்சியாரிட்டிக்கு கிடைத்தது என்றே சொல்வேன்’.
’நீங்கள் சீதையாக நடிக்க ஆரம்பத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதே?’
அது போன்ற நந்திகள் எங்கேதான் இல்லை சொல்லுங்கள். இப்போது ஆந்திர அரசே என்னை கவுரவித்து சிறந்த நடிகை விருது தந்திருப்பதை அவர்களுக்கு தந்திருக்கும் பதிலடியாகவே கருதுகிறேன்.
ஆரம்பத்தில் சீதையாக நடிக்க நீங்களே தயங்கியதாக சொல்லப்பட்டதே?’
தொடர்ந்து கிளாமரான படங்களாகவே பண்ணியிருக்கிறோமே, அப்படி ஒரு புனிதமான, ஏற்கனவே நான் நடித்து வந்த பாத்திரங்களுக்கு முற்றிலும் முரணான ஒரு பாத்திரத்தில் என்னை ஏற்றுக்கொள்வார்களா மக்கள் என்ற பயம் எனக்கு ஓரளவு இருக்கத்தான் செய்தது. அப்போது என்னை முழுதும் கன்வின்ஸ் செய்தவர் நடிகர் பாலகிருஷ்ணா. அவரது மந்திரச்சொற்களில் மயங்கியே நான் சீதையாக நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அதே போல் இயக்குனர் பாபுவையும் மறக்க முடியாது. ‘ நீ சீதையாக நடிப்பதைப் பற்றி யார் என்ன கமெண்ட் அடித்தாலும், அதை மனதில் ஏற்றிக்கொள்ளாதே’ என்ற ஒற்றைவரி ஆலோசனை மட்டுமே அவர் சொன்னது. அதை படம் நெடுகிலும் அப்படியே பற்றிக்கொண்டேன்.
இந்த விருது, இனி இதுபோன்ற வித்தியசமான படங்களில் நடிக்கவேண்டும் என்ற உங்களது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறதா நயன்?’
நான் சினிமாவுக்கு இத்தோடு ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன. மசாலா படங்கள் வெற்றியையும் பணத்தையும் மட்டுமே குவிக்க வல்லவை. இதுபோன்ற படங்கள் மூலம்தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை’ராமாயணம் ‘ரிலீஸ் சமயமே தெரிந்துகொண்டேன்.
சீதை போன்ற புராண கால கேரக்டர்கள் எல்லாவற்றிலுமே நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன்.
நச்’சென்று முடிக்கிறார் நயன் தாரா.