’சாருலதா’வில் இருவேறு அவதாரங்கள்எடுத்து, அடுத்து கைவசம் படங்கள் எதுவுமின்றி, தனது வீட்டு மொட்டமாடியில் நாவல்கள் படித்து வரும் ப்ரியாமணிக்கு மலையாளத்திலிருந்து ஒரு விநோதமான ஆஃபர் வந்திருக்கிறதாம்.
அந்த ஆஃபரை அனுப்பியிருப்பவர் மலையாள இயக்குனர்
மஜீத்மன்னஸெரி. படத்தின்பெயர் ‘யெஸ்ஐயாம்’.
இப்பதானங்க நம்ம கோடம்பாக்கத்துல ஒருத்தர் ‘ஐயாம்சாம்’-ஐ காப்பியடிச்சி ‘தெய்வத்திருமகள்’னு டீ போட்டுக் குடிச்சாரு. மறுபடியுமா?
’நோநோ, அந்த ‘ஐயம்சாம்’க்கும் இந்த ‘யெஸ் ஐயாம்’க்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த ’யெஸ்ஐயாம்’ தான் ஒரிஜினலாக ஒரு ஆண் என்பதை சமூகத்துக்கு மறைத்துவிட்டு, பெண்போல் நடிக்கும் ஒருவனின் விபரீத கதை.
இந்த ‘ஆண்’ கேரக்டரில்நடிக்கச்சொல்லிதான், அந்த மலையாள இயக்குனரிடமிருந்து ப்ரியாமணிக்கு அழைப்பு வந்திருக்கிறதாம்.
‘பொம்பளை மாதிரி நடிக்கிற ஆம்பளை கேரக்டரா? ஒண்ணுமே புரியலை. கொஞ்சம் ஸ்கிரிப்டை அனுப்பிவைங்க சார். படிச்சிட்டு சொல்றேன்’ என்று பதில் சொல்லியிருக்கிறாராம் ப்ரியா மணியன்.