amnk

  பெங்களூர் எம்.ஜி.ஆர்.ரோட்டில் சிறுத்தை பாய்ந்தோடி,காணாமற் போனதும் அத்தனை பேரும் திகிலில் உறைந்து போனோம். மொத்த யூனிட்டும் நாலா பக்கமும் சிதறி ஓடித் தேடியது. அரைமணி நேரம் கழித்து அந்தச் சிறுத்தை ஒரு குப்பைத் தொட்டிக்குள் படுத்திருந்ததைக் கண்டு பிடித்தோம்அப்புறம் தான் எங்களுக்கு உயிரே வந்தது.

     எனவே பல பேர் மிகச் சாதாரணமாகமிருகங்களை வைத்து படமெடுப்பவர் தானேஎன்று சொல்வது போல்,

அது அவ்வளவு ஈஸியான வேலை அல்ல. நடிக,நடிகையர் அவ்வளவு ஈஸியாக மிருகங்களை நம்பி, பக்கத்தில் போக மாட்டார்கள். இதற்காக நான் முதலில் அந்த மிருகங்களுடன் பழகி, அவற்றைத் தட்டிக் கொடுத்து, கட்டிப் பிடித்துக் காட்டி, அவர்களுக்குத் தைரியத்தை வரவழைப்பேன்.

     மிருகங்களில் நாய் மற்றும் யானையை வேலை வாங்குவது சற்று ஈஸி. நமது தேவையை ட்ரெய்னர்களிடம் சொல்லி விட்டால், கொஞ்ச நேரத்தில் அதற்கு ஏற்ப பழக்கி விடுவார்கள். குரங்கை வைத்து வேலை வாங்குவது சற்று சிரமம். திடீர் திடீரென்று தன்னிஷ்டத்திற்கு செயல்பட்டு விடும். பொறுமையாக காத்திருந்துதான் எடுக்க வேண்டும். ஆனால், ஃபேஸ் எக்ஸ்பிரஷன் கொடுப்பதில் குரங்குதான் நம்பர் ஒன்.

     இருப்பதிலேயே சிரமமானது பாம்பை வைத்துப் படம் எடுப்பதுதான். அதைப் பழக்கவே முடியாது. அது இஷ்டத்திற்குத்தான் அது ஓடும். கிடைப்பதை எல்லாம் ஷூட் பண்ணிக் கொண்டு வந்து, எடிட்டிங்கில் வைத்துதான் சமாளிப்போம். இந்த விலங்குகளை எல்லாம் வெயில் நேரத்தில் வேலை வாங்க முடியாது. இதற்காகவே காலை 7 மணியிலிருந்து 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் படப்பிடிப்பு நடத்துவோம்என்று குறிப்பிட்ட இராம.நாராயணனின் முதல் படம் – ‘சுமைபுரட்சிகரமான வெற்றிப் படம்.

     ஆரம்பத்தில்சுமை’, ‘பட்டம் பறக்கட்டும்’, ‘சிவந்த கண்கள்’, ‘சிவப்பு மல்லி’… என்று சமூக அநீதிகளுக்கு எதிரான படங்களையே இராம.நாராயணன் எடுத்து வந்தார். ‘சிவப்பு மல்லியில்எங்கள் வீட்டில் விளக்கும், அடுப்பும் தவிர எல்லாம் எரிகின்றன’. ‘எங்கள் வீட்டு பெண்களின் புடவையில் நெய்த நூலை விட தைத்த நூல்களே அதிகம்…’ என்பது போன்ற வசனங்கள் அன்றைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தன. ஆனால், அதன் பின் பாதைமாறி விட்டார் இராம.நாராயணன்.

     நான் செந்தமாக தயாரித்தபட்டம் பறக்கட்டும்’, ‘சிவந்த கண்கள்ஆகிய படங்கள் தோல்வி கண்டதும், பாதை மாறிஇளஞ்ஜோடிஎன்ற கமர்ஷியல் படத்தை எடுத்தேன். அது சூப்பர் ஹிட்டானதும், பல தயாரிப்பாளர்கள் தேடி வந்து, அதே போல் படம் வேண்டும் என்று கேட்கவே, எனதுட்ராக்மாறியது. ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என்று பலவிதமான படங்களை சிறிய பட்ஜெட்டில் எடுத்து வெற்றி கண்டேன்.

     இருந்தாலும் பாதை மாறி விட்ட குற்றவுணர்ச்சியோடுஈநாடுஎன்ற மலையாளப் படத்தைஇது எங்க நாடுஎன்று தமிழில் எடுத்தேன். அடுத்து, பாடல்களே இல்லாமல்சோறுஎன்ற சீரியஸ் படத்தை எடுத்தேன். பாலசந்தர், டி.ராஜேந்தர் ஆகியோர் அந்த படத்தை பார்த்து விட்டு வெகுவாகப் புகழ்ந்தனர். ஆனால் படம் வியாபாரமாகவில்லை. எனவே தமிழகம் முழுக்க சொந்தமாய் ரிலீஸ் செய்தேன். ஆனால் அதில் எனக்கு பெருத்த நஷ்டம். சொத்துக்களை விற்கும் அளவுக்குக் கடன் ஏற்பட்டு விட்டது.

     நான் நஷ்டப்பட்டதை விட, என்னை நம்பியிருந்த சுமார் 40 பேர் கொண்ட யூனிட் பற்றி அதிகக் கவலை பிறந்தது. எனவே, என் தாகங்கள், லட்சியங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மறுபடி கமர்ஷியல் பக்கம் வந்தேன். பாம்பை வைத்துஆடிவெள்ளிபடம் எடுத்தேன். அது சூப்பர் ஹிட் ஆனது. 200 நாள் ஷூட்டிங் நடத்தப் பட்ட பல படங்கள் 20 நாள் கூட ஓடாமல் போவதுண்டு. ஆனால் 20 நாட்களில் எடுக்கப்பட்டஆடி வெள்ளி’ 200 நாட்கள் ஓடியது.

     பெண்கள் சென்டிமென்டிற்கு ஏற்ப படம் எடுத்தால், வியாபாரத்தில் மினிமம் கியாரண்டி இருப்பதை உணர்ந்தேன். தொடர்ந்து அதே பாணியில் விலங்குகளை வைத்து பல படங்களை எடுத்தேன். அது தவிர, பேபி ஷாம்லியை வைத்து பல படங்களை எடுத்தேன். பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றனஎன்று குறிப்பிட்டார் இராம.நாராயணன்.

     எஸ்..சந்திரசேகர், இராம.நாராயணன் உள்ளிட்ட சில இயக்குநர்கள், பெரிய நடிகர்களை எதிர்பார்க்காமல் படம் பண்ணியதை பெருமையாகக் குறிப்பிட்டார்கள். ஆனால்அதுபோல் பெரிய நடிகர்களை வைத்து படமெடுப்பதில் பெரிய இழுக்கு ஏதுமில்லை” – என்பது இயக்குநர் பார்த்திபனின் கோணம்.

     பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து அவர் படம் பண்ணியது இல்லை என்றாலும் கூட, “அப்படி படமெடுப்பது ஓர் இயக்குநருக்கு தாழ்ச்சியில்லைஎன்று வாதிடுகிறார் அவர்.

     அன்றைக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் இருந்த அதிகாரம் இன்றைக்கு நடிகர்கள் வசம் மாறிப்போயிருந்தால், அது தப்பில்லை. புருஷனுக்கு மனைவி கட்டுப்பட்டே ஆக வேண்டுமென்று ஒரு காலமிருந்தது. அவன் இறந்தால் மனைவியும் உடன்கட்டை ஏற வேண்டுமென்ற காலம் கூட இருந்தது. ஆனால் இன்றைக்கு அது மாறவில்லையா ? எனவே மாறுதல் வருவதில் தப்பில்லை. நடிகர்களை நம்பி வியாபாரம் என்ற நிலை வரும் போது, நடிகர்கள் டாமினேட் பண்ணினால் அதில் தப்பில்லை.

     ரஜினிகாந்த் என்பவர் சினிமாவில் ஒரு சூப்பர் பவர். அந்த பவரை யூஸ் பண்ணிக்கிறதுதான் புத்திசாலித்தனம். அவரது ஸ்டைலை மாற்றி, இயக்குநர் தன் விருப்பத்திற்கு படமெடுத்தால், அது ரிஸ்காகத்தான் அமையும். ‘பருத்திவீரனுக்குகார்த்தி என்ற புதிய ஹிரோவை போட்டதுதான் புத்திசாலித்தனம். அதை விஜய்யை வைத்து எடுக்க நினைத்திருந்தால், அது ரிஸ்க்காகத்தான் இருந்திருக்கும்.

     ஹிரோக்களை நம்பாமல் சப்ஜெக்ட்டை நம்பி படமெடுக்க கூடுதல் துணிச்சல் வேண்டுமென்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். பல பெரிய ஹீரோக்களுக்கு மத்தியில்தான், நான் அறிமுகமானபுதிய பாதைவெற்றி பெற்றது. பல தயாரிப்பாளர்களிடம் நான் கதை சொன்ன போது, ‘பெரிய ஹீரோவை வச்சு பண்றதுன்னா பண்ணலாம்என்றுதான் சொன்னார்கள். ஆனால், ‘விவேக் சித்ராசுந்தரம் என்னை ஏற்றுக் கொண்டு படத்தைத் தயாரித்தார். படம் பெரும் வெற்றி பெற்றது.

     இன்றும்சிவாஜிபோன்ற பிரமாண்ட படங்களைப் போல், ‘காதல்’, ‘பருத்திவீரன்படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டுதான் உள்ளன. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஓஹோ வென்றிருந்த காலகட்டத்தில்தான் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் போன்ற டைரக்டர்களின் டாமினேஷனும் இருந்தது. ‘வலியோன் வெல்வான்என்பதுதான் இதன் அடிப்படை. அதனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகர்களின் டாமினேஷன் இருப்பது போல, சில டைரக்டர்களின் டாமினேஷனும் இருக்கவே செய்கின்றன.

     ஆனால், நடிகருக்கும் இயக்குநருக்கும் ஒரு வித்யாசம் உண்டு. ஒரு பெரிய நடிகருக்கு சிறிதளவு புத்திசாலித்தனம் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு சின்ன டைரக்டர் என்றாலும், அவருக்கு பெரிய புத்திசாலித்தனம் அவசியம். ஆனால், சிவாஜி அப்படியில்லை. நடிப்பைத் தாண்டி அவர் பிற தொழில் நுட்பங்கள் பக்கம் ஈடுபாடு காட்டவேயில்லை. ஆனால் இருவருமே திரையுலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள்தான்.

     நான் ஆரம்பத்தில் நடிகனாக வேண்டுமென்ற ஆசையோடுதான் சினிமாத்துறை பக்கம் வந்தேன். மெல்ல, மெல்ல புத்திசாலித்தனம் வந்து பிறகுதான் இயக்குநராகும் ஆசை உருவெடுத்ததுஎன்று சொல்லி சிரித்த ரா.பார்த்திபன், ஆரம்பத்தில் நடிப்பதற்காக சான்ஸ் கேட்டு பல கம்பெனிகள் ஏறி இறங்கியவர். அது முடியாமல் போன நிலையில்தான், உதவி இயக்குநராகவாவது திரையுலகோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று பாதை மாறினார். ‘புதிய பாதைபட வெற்றி, அவர் வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

     நடிகனாகி விட வேண்டுமென்ற கனவோடு முதன்முதலாக ஒரு படக் கம்பெனிக்குச் சென்று, வாய்ப்புக் கேட்டேன். அவர்கள் என்னிடம்குதிரையேற்றம் தெரியுமா? நீச்சல் தெரியுமா? சிலம்பம் தெரியுமா?” என்று கேட்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது. ‘சரிஇவர்கள் எடுக்கும் படம் ஆக்ஷன் ஹீரோ சப்ஜெக்ட் போலும்’ – என்று நினைத்துக் கொண்டு, அடுத்ததாக ஒரு கம்பெனிக்கு சான்ஸ் கேட்டுப் போனேன். அவர்கள் கேட்ட கேள்விகள் என்னைத் தூக்கிவாரிப் போட்டன. “ [திருப்பங்கள் தொடரும் ]            

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.