பாகிஸ்தானிலிருக்கும் அபேதாபாத்தில் மறைந்து வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடனை அவரது வீட்டிற்கே தனது சீல்(SEAL) என்கிற கமாண்டோ படையை அனுப்பி லைவ்வாக ஒபாமாவுக்கு காட்டியபடியே சுட்டுக் கொன்றது அமெரிக்க ராணுவம்.
கொன்றதோடு அவரது உடலை கைப்பற்றிச் சென்று வேறு யாருக்கும் காட்டாமல் கார்ல் வில்சன் என்கிற அமெரிக்க போர்க் கப்பலில் வைத்து
ஒரு கனமான பையில் போட்டு ஆழமான கடலில் மூழ்கடித்தனர்.
இவ்வளவும் செய்து முடித்ததை இப்போது ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்'(?) மூலம் ஒரு பத்திரிக்கை என்ன நடந்தது என்கிற தகவல்களை வாங்கி வெளியிட்டிருக்கிறது.
அதன் படி பின்லேடனைக் கொல்லப் போவது பற்றியும், அவரது உடலை கப்பலில் வைத்து நடுக்கடலில் ஆழ்த்துவது பற்றியும் கப்பலின் உயர் அதிகாரிகள் சங்கேத வார்த்தைகளில் தான் பேசுவார்களாம்.
ஹெலிகாப்டரைப் பறவை என்றும் பின்லேடன் உடலை பாக்கேஜ் (package) என்றும் சங்கேதமாகப் பேசிக் கொண்டார்களாம்.
பின்லேடன் உடலை கப்பலுக்குக் கொண்டு வந்ததும் அவரது உடலைக் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய குளிப்பாட்டியதாகவும், பின்னர் வெள்ளைத் துணி கொண்டு உடலைச் சுற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ஒரு மிலிட்டரி ஆபிஸர் இஸ்லாமிய வரிகளை ஓதியதாகவும், அதை ஒருவர் அரபியில் மொழிபெயர்த்துப் படித்ததாகவும் அதன் பின் ஒரு கனமான எடைகள் கொண்ட பையில் உடலைப் போட்டு பின்னர் அந்தப் பையை கப்பலின் மேல் தளத்திலிருந்து கடலுக்குள் தள்ளிவிட்டதாகவும் தகவல் பெறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு கப்பலில் இருந்த பெரும்பாலான பேருக்குத் தெரியாமல் ரகசியமாக நடத்தப்பட்டது என்றும், இந்த நிகழ்ச்சியை யாரும் படம் எடுக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுனானாம் விவரமானவன். அமெரிக்காவின் குரூர மன வெளிப்பாடுகளில் இது ஒரு விதம்.