கடந்த நவம்பர் 7ம் தேதி தனது விஸ்வரூபம் 3D ட்ரெயிலர் வெளியீட்டு விழாவுடன் தனது 58வது பிறந்த நாளையும் ரசிகர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கொண்டாடினார் கமல்.
அன்று இரவு தனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களுக்கு பிறந்த நாள் விருந்து கொடுத்தாராம் கமல். ஸ்ரீராம், பார்த்த சாரதி, சீனிவாஸ் போன்ற பாடகர்களின் பாடல்களுடன் நடந்த விருந்தில் கலந்து கொண்ட ஆச்சர்ய விருந்தினர் ரஜினிகாந்த்.
வழக்கம் போல நடுவில் எஸ்கேப் ஆகிவிடாமல் நெடுநேரம் விருந்தில் நள்ளிரவில் 12 மணிக்கு கமல் கேக் வெட்டும் வரையும் உடனிருந்தாரம் ரஜினி.
சரியாக 12 மணிக்கு எஸ்.பி.பியுடன் சூப்பர் ஸ்டார் மற்றும் எல்லோரும் சேர்ந்து ஹேப்பி பர்த்டே டு யூ என்று வாழ்த்துப் பாட கமல் கேக் வெட்டி தனது மனைவி கவுதமிக்கும், மகள் சுப்புலட்சுமிக்கும் ஊட்டிவிட்டாராம்.
பின்னர் பழைய நினைவுகளை அசை போட்டபடி இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இரவு நீண்ட நேரம் உரையாடிக்கொண்டே இருந்தார்களாம்.
அப்ப சரக்கு பார்ட்டி தரலீங்களா?.. போங்க கமல் சார்…நீங்க ரொம்ப மோசம்.