நேற்று தனது 47வது பிறந்த நாளை (எவ்வளவு தைரியமா தனது வயசை கரெக்டா சொல்றார் பாருங்க) ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார் ஷாருக்கான்.
ஆரம்பத்தில் வழக்கமான ஹீரோயினைத் துரத்தும் காதலனாக பல படங்களில் நடித்த ஷாருக்கான்
பின்பு சீரியசான கதையுள்ள படங்களிலும் கவனம் செலுத்தினார்.
சமீபத்தில் வெளிவந்த ‘மை நேம் ஈஸ் கான்’ என்கிற படம் உலகெங்கும் அவருக்கு ஒரு அறிமுகத்தை உண்டாக்கியது.
தற்போது வரும் தீபாவளிக்கு அவரது புதிய படமான ‘ஜப் தக் ஹை ஜான்’(Jab Tak Hai Jaan) ரிலீசாகவிருக்கிறது. இதில் ஷாருக் ஒரு ரிட்டையர்டான ராணுவ வீரராக நடித்திருக்கிறார்.
ராணுவ வீரராக நடிப்பதில் தான் பெருமை கொள்வதாகவும், இந்தத் தொழிலை இவ்வாறு பிரபலப்படுத்துவதன் மூலம் ராணுவத்தில் வேலை செய்வதை நிறையப் பேர் பெருமையாக கருதும்படி செய்ய விரும்புவதாகவும் கூறினார்.
ராணுவத்தில் வேலை செய்வது நாட்டுக்கு ஆற்றும் பெரும் பணி என்று குறிப்பிட்டார். காஷ்மீரில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த போது சில ஆர்மி ஆபிஸர்கள் இவரை சந்தித்த போது “நீங்கள் ஆர்மி ஆபிஸராக நடிப்பதால் எங்கள் பையன்களும் மிக புத்துணர்வு பெறுவார்கள்” என்று கூறினார்களாம்.
எது எப்படியோ வட நாட்டில் ராணுவத்தைப் புகழ்ந்து படம் வருவது சகஜம். ஏனென்றால் டெல்லி, எல்லை, காஷ்மீர், பார்லிமண்ட், 2G என்று எல்லா தலை நகர் விஷயங்களிலும் புழங்குபவர்கள் வடநாட்டினரே.
ஆதலால் நம்ம ஊர் மாதிரி ‘ராணுவம் என்றாலும் தப்பு தப்புதான்’ என்று சொல்லத் தெரியாதவர்கள். ஏனென்றால் ‘அமைதிப் படையாகப் போய் ஏன் அட்டூழியம் செய்தாய்?’ என்று எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் நம்ம ஊர்க்காரர்கள் தானே.