’ட்விட்டரில் வெளியான அஜீத்தின் ஆக்சிடெண்ட் சம்பந்தப்பட்ட வீடியோவில் டகால்டி வேலைகள் எதுவும் இல்லை. அதே சமயம் அதைப்பார்த்து அஜீத் ரசிகர்கள் ஓவராக உனர்ச்சி வசப்படவேண்டியதும் இல்லை. அவர் மீது எந்த அளவு அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது ஒரு டைரக்டராக எனக்கும் தெரியும்’ என்று
ட்விட்டரில் ட்விஸ்ட் அடிக்க ஆரம்பித்திருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.
படம் துவங்கி ஆறுமாதங்கள் ஆனநிலையில், இதுவரை டைட்டிலே சரியாக செட் ஆகாததால் ‘டைட்டில் இல்லாத படம்’ என்ற பெயரிலேயே ரிலீஸ் பண்ணிவிடலாமா என்ற யோசனையில் அஜீத்தை வைத்து, விஷ்ணுவர்த்தன் இயக்கிவரும் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக்காட்சியின் வீடியோ ஃபுட்டேஜ், யூடியூப்பில், சமீபத்தில் ‘எகஸ்மாத்தாக’ வெளியிடப்பட்டது. அதனைப் பார்த்துப் பதறிய அஜீத் ரசிகர்கள் பலரும், ‘தல’ விஷயத்தில் விஷ்ணுவர்த்தனும், ஸ்டண்ட் இயக்குனரும் கொஞ்சம் தறுதலயாக நடந்துகொண்டதாக கமெண்டுகளை அடித்துத்தள்ளினர்.
வெளியிடப்பட்ட ஆக்ஷனுக்கு, ரசிகர்கள் மத்தியில் இப்படி ஒரு தப்பான ரியாக்ஷன் வரும் என்று சற்றும் எதிர்பாராத விஷ்ணுவர்த்தன், கடந்த இரண்டு நாட்களாக அந்த வீடியோ காட்சிகளுக்கு விளக்கம் சொல்லிச்சொல்லியே ஓய்ந்து வருகிறார்.
‘ அவர் மேல உங்களுக்கு இருக்கும் அக்கறைக்குகொஞ்சமும் குறைச்சல் இல்லாத அக்கறை எங்களுக்கும் இருக்கு. தயாரிப்பாளர் ரத்னம் சார் கொஞ்சம் சிரமத்துல இருக்குறதுனால பேசின சம்பளத்துல இன்னும் பாதிகூட வந்துசேரலைன்னா பாத்துக்கங்களேன்,..’ என்று தன்னிலைவிளக்கம் அளிக்கிறார் விஷ்ணுவருத்தன்.
பூஜைபோடும்போது, ஜனவரி 14- பொங்கல் ரிலீஸ் என்று துவங்கப்பட்ட இப்படம், சில தலயாய காரணங்களால், அஜீத்தின் பிறந்த நாளான மே-1-ம் தேதிக்கு தள்ளப்படுகிறது என்கிற செய்தியை, முதன்முதலாக பூஜைபோட்டு துவங்கி வைப்பதில் பெருமகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைகிறோம்.