ஹீரோயின்கள் படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவது காலம் காலமாக நம் தமிழ்ச் சினிமாவில் வழங்கி வரும் ஒரு பாரம்பரியம்(?).
மார்க்கெட் போன ஹீரோயின்கள், அல்லது மார்க்கெட் போன ஹீரோக்களுக்காக ஹீரோயின்கள், அல்லது
காய்கறி வாங்க மார்க்கெட் போன ஹீரோயின்கள் என்று ஏதாவது காரணத்தில் குத்தாட்ட நிகழ்வு நடைபெறும்.
சமீபத்தில் அதைச் செய்ய விழைந்திருப்பவர் ஒரு ஹீரோ. அவர் நம் தனுஷ். தான் முதன் முதலாக தயாரிக்கும் படமான எதிர் நீச்சல் படத்தில் தான் குத்துப் பாட்டுக்கு நடனம் ஆட இருக்கிறார்.
சிவ கார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிக்கும் இந்தப் படத்தின் புதுமுக இயக்குனர் செந்தில். இவர் வெற்றிமாறனின் உதவியாளராக இருந்தவர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் மிகப் பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறதாம். வரும் 14ம் தேதி ஆடியோ வெளியிட இருக்கிறார்கள்.
இதுல என்ன பாஸ் விசேஷம். தனுஷ் ஆடுனா ஆடட்டும் என்று கடுப்பாகப் போகும் ரசிக மகாசனங்களே உங்களுக்கு இதோ ஒரு முக்கிய செய்தி. தனுஷ்ஷூடன் கூட அந்தப் பாடலுக்கு ஆடப்போவது உங்கள் எங்கள் நச் நயன்தாரா. (படத்தின் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா இல்லீங்களாம்.. வேற ஒருத்தராம்.. இது பிட்டு).