கமல் ஏற்கனவே சொல்லியது போலவே மதுரையில் 7ம் தேதி காலையிலும், கோயமுத்தூரில் நண்பகலிலும் சென்னையில் மாலையிலும் நடைபெற்ற விழாக்களில் விஸ்வரூபம் ஆடியோவை வெளியிட்டார்.
மதுரையில் காலையில் ஹெலிகாப்டரில் வேலம்மாள் கல்லூரியின் மைதானத்தில் வந்திறங்கிய கமல் படத்தின் ஆடியோவை வெளியிட
அங்கு தனது ரசிகர்களில் ஒருவரான ஊனமுற்ற சாதனைகள் செய்த விளையாட்டுவீரர் பாரி என்பவரை முதல் ஆடியோவைப் பெற்றுக் கொள்ளும்படி செய்தார்.
அவருடன் படத்தின் நாயகிகள் ஆண்ட்ரியாவும், பூஜாகுமாரும், படத்தின் 3 இசையமைப்பாளர்களான ஷங்கர்(மஹாதேவன்),இஷான் மற்றும் லாய் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்பு பேசிய கமல், இருபது வருடங்களுக்கு முன் நான் இப்படி மதுரைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்குவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. இன்று அது நடந்திருக்கிறது என்றால் அதன் காரணம் என் ரசிகர்களாகிய நீங்கள் தான் என்றார்.
அடுத்ததாக அதை ஹெலிகாப்டரில் கோயமுத்தூருக்குக் கிளம்பியது கமல் மற்றும் கூட்டணி. கோயமுத்தூரில் ஹிந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நண்பகலில் இறங்கினார் கமல்.
அவர் வருகைக்காக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெரும் ரசிகர் கூட்டம் 2 மணி நேரமாகக் காத்திருந்தார்கள் (இன்னும் உங்களுக்கு இப்படி ரசிகர்கள் இருக்காங்க கமல் சார்..).
மேடையில் இசையமைப்பாளர்களுடன் ஏறிய கமல் ஆடியோவை வெளியிட்டார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிளம்பிய கமல் நேராக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வந்திறங்கினார்.
சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பெரும் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், பாரதிராஜா, லிங்குசாமி, சண்முகராஜா, ஆண்ட்ரியா, பூஜாகுமார், படத்தின் இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் நடந்த இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் நம் இளையராஜா. வழக்கமாக தனது படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கே வருவதில் தயக்கம் காட்டுபவர் இளையராஜா அதுவும் மற்றவர்கள் இசையமைக்கும் படத்துக்கு மிக அரிதாகத்தான் வருவார்.
விழாவிற்கு வந்திருந்த இளையராஜாவின் கால்களைத் தொட்டு ஆசி பெற்றனர் படத்தின் இசையமைப்பாளர்கள் மூவரும்.
பின்பு மேடையில் கமல், கௌதமி, வசந்த், நாயகிகள், இசையமைப்பாளர்கள் புடைசூழ இளையராஜா படத்தின் ஆடியோவை வெளியிட அதை பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.
கமல் சார்.. நீங்க நினைச்ச மாதிரியே வித்தியாசமாக செய்து மக்கள் கவனத்தை விஸ்வரூபம் பக்கம் திருப்பியிருக்கீங்க.
படத்துல ஏமாத்திடாதீங்க.