கமலின் விஸ்வரூபம் படம் டிஜிட்டல், ஆரா, 3D, நாலு டீ என்று என்னென்னவோ தொழில்நுட்பங்களைப் புகுத்தி விட்டாலும் வியாபாரம் மட்டும் ஆகமாட்டேன் என்று படுத்துவிட்டது.
பார்த்தார் கமல். புரொட்யூஸர்கள் யாரும் படத்தை வாங்க ரெடியாக வில்லை. சரி அதிரடியாக ஏதாவது செய்து
இதை விற்றாகவேண்டும் என்று முடிவெடுத்தார்.
நேராக டி.டி.ஹெச். (DTH) என்கிற சேட்டிலைட் கேபிளுக்கு விஸ்வரூபத்தை விற்றுவிட்டார். அதிலும் திறமையாக தியேட்டர்களில் படம் ரிலீஸாகும் நேரத்துக்கு 8 மணி நேரம் முன்பு விஸ்வரூபம் டி.டி.ஹெச்சில் ரிலீஸாகும்.
நேற்று இந்த முடிவை அவர் அதிகாரபூர்வமாக ப்ரொட்யூஸர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.
ப்ரொட்யூசர்கள் இப்போது அவசர அவசரமாகக் கூடிப் பேசி இனி படம் நேராக டி.விக்கு விற்கப்பட்டால் தியேட்டர்கள் என்ன ஆவது என்று கவலைப்படப் போகிறார்கள்.
கமலுக்கு ரெட்கார்டு மாதிரி ஏதாவது போட்டாலும் போடுவார்கள். இப்படியே எல்லாரும் தியேட்டர் வேண்டாம் என்று நேராக சேனல்களுக்குப் படங்களை விற்றுவிட்டு டைரக்டாக சேனலிலேயே ரிலீஸ் செய்ய ஆரம்பித்தால் என்ன ஆகும் ?
தமிழ் சினிமா ஒன்றும் குடிமுழுகி விடாது. தியேட்டர்கள் எல்லாம் ஷாப்பிங் மால்களாய் மாறிவிடும்.
ஆனால் சேனல் டி.வி.க் காரர்களின் ஆதிக்கம் சினிமாத்துறையின் மீது அழுத்தமாக விழும். அது சினிமாவுக்கு ஆபத்தானது.
மற்றபடி இப்போ எடுக்கிற படமெல்லாம் டி.வியில 15 நிமிஷத்துக்கு வர்ற அட்வர்டைஸ்மண்ட்டுக்கு நடுவுல கொஞ்சம் பார்க்கிற மாதிரித்தானே இருக்குது.