மணிரத்னத்தின் கடல் படம் வேக வேகமா ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இசை வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ராமேஸ்வரத்தில் கடலோரக் கிராமமொன்றில் கடைசி கட்ட ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தாராம் மணிரத்னம்.
அப்போது ஷூட்டிங் என்றவுடன் கிராமத்தினர் கூட்டம் கூட்டமாக வந்து ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இதனால் ஷூட்டிங் வேலைகளில் தடங்கல் ஏற்படுவதை தவிர்க்க மணிரத்னம் தனது புரொடக்ஷன் மேனேஜரை வைத்து வீட்டிற்கு ஷூட்டிங் நடக்கும் ஒவ்வொரு தினமும் ரூ.200 தருவதாகவும், அதற்குப் பதில் கிராமத்தினர் வந்து ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
ஐடியா செமையாக ஒர்க் அவுட் ஆகி விட்டதாம். தினமும் 200 ரூபாய் கிடைத்ததால் மக்கள் யாரும் ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் எட்டிக் கூட பாக்கலியாம்.
நம்ம பவர் ஸ்டார் படத்தைப் பார்க்கவே பிரியாணியும், க்வார்ட்டரும், 200 ரூபாய் பணமும் தருவார். இங்கே ஷூட்டிங் பக்கம் வராதீங்கன்னுட்டு நம்ம மணிரத்னம் சார் குடுக்கிறார்.
அவர் டெய்லி குடுத்த 200ல நிச்சயமா 150 டாஸ்மாக்குக்குத்தான் போயிருக்கும். இன்கம் டேக்ஸை இப்படிக் கட்றார் போல மணிரத்னம்.
என்னமோ போங்க மக்கா.. நல்லா இருந்தா சரி.