இயக்குனர் சசியின் இயக்கத்தில் வெளிவந்த ஜீவா நடித்த டிஷ்யூம் படம் பார்த்திருப்பீர்கள்.
அதில் ஸ்டண்ட் மாஸ்டராக வரும் ஜீவாவின் குள்ளமான நண்பராக வரும் கின்னஸ் பக்ரு தான் மலையாளத்தில் அவதரித்திருக்கும்
அந்தக் குட்டி இயக்குனர்.
இவர் சமீபத்தில் மலையாளத்தில் வினயனின் இயக்கத்தில் அற்புதத்தீவு என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். சரியாக 2 அடி 6 அங்குலமே உள்ள இவர் முழு நீளத் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததால் கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகக் குள்ளமான கதாநாயகன் என்கிற பெயர் இவருக்கு கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து தற்போது இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
அடுத்து இவர் இயக்கவிருக்கும் மலையாளப் படத்தின் பெயர் ‘குட்டியும் கோலும்’. இது கேரளாவில் கிராமங்களில் விசேஷமாக விளையாடப்படும் ஓரு விளையாட்டின் பெயர்.
இந்தப் படத்தை இயக்குவதோடு, இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அஜய்குமார்.
நல்லா வருவீங்க பக்ரூ என்கிற அஜய். இயக்குனருக்கும் ஏதாவது கின்னஸ் சாதனை இருக்கும் வாங்கிக்குங்க.
உயரமான இயக்குனர்கள்லாம் குள்ளமான மனசோட படம் எடுக்குறாங்க.
குள்ளமான நீங்க விசாலமான மனசோட படம் எடுப்பீங்கன்னு நம்புறோம்.