narve-1

கோழிகள் உயிரோட நடமாடுறதை விடவும் ஃபிரீஷர்ல அதிகமா இருக்குற நார்வே நாட்டுல , ஃப்ரெஷ்சா கத்தரிக்காய் புளிக்குழம்பு குடுத்து என்னை கண்கலங்க வச்சாங்க’ என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அவரையும் விட ஒரு படிமேலே போய்,’ விருந்தாளிங்களை உபசரிக்கிறதுல உலகத்துல இவங்களை அடிச்சிக்க ஆளே இல்ல’ என்றார் தொடர் வெற்றிகளின்

பூரிப்பில் மெல்ல ‘கும்கி சாலமனாய் மாறிவரும் பிரபுசாலமன். எல்லாம் நம் நார்வே தமிழர்களைப் பற்றித்தான்.

டந்த சில வருடங்களாக தமிழ் திரைப்பட விழா நார்வேயில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள திரைப்பட இயக்குனர்களை அழைத்து விருது கொடுத்து கவுரவித்தும் வருகிறது அங்குள்ள ஒரு அமைப்பு. அந்த விருதோடு சேர்த்து சைடிஷாகக் கிடைத்ததுதான் உபசரிப்பும், கத்தரிக்கா குழம்பும்.

என்ன காரணங்களுக்காக விருதுகொடுத்தார்கள் என்று புரியாமல் நம்மை தலையைப் பிய்த்துக்கொள்ள வைத்து, சப்பை,சவலைப் படங்களுக்கு கூட ஏதாவது ஒரு கட்டாயத்தில் விருதுகளை கொடுத்து கவுரவப்படுத்தும் உள்ளூர் அமைப்புகளை நாணிக்கோண வைக்கிற விதத்தில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து விருது கொடுக்கிறது இந்த அமைப்பு. இதன் இந்திய ஒருங்கிணைப்பாளராக டாக்டர் சங்கர் செயல்பட்டு வருகிறார்.

இந்த வருடம் போட்டியில் கலந்து கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட பட்டியல்கள் பின்வருமாறு-

சுந்தரபாண்டியன்
பிட்சா
வழக்கு எண் 18 / 9
அட்டைக் கத்தி
கும்கி
சாட்டை
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணம்
டோனி
ராட்டினம்
நீர்ப்பறவை
ஒருகல் ஒருகண்ணாடி
புதுமுகங்கள் தேவை
இனியவளே காத்திருப்பேன் (ஆஸ்திரேலியா)
இனி அவன் (இலங்கை)
சகாராப் பூக்கள் (கனடா)

விருது விஷயத்துல ரொம்பவும் சீரியஸாப் போய்விடக்கூடாது என்று லிஸ்டில், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யையும் சேர்த்துக்கொண்டார்களாம்.

narve-2

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.