அடுத்த படத்தில் ‘சிக்ஸ்பேக்குவாலா பேக்குவாலா கய மயா ஹா’ என்கிற ரேஞ்சில் டியூன் எதுவும் கம்போஸ் பண்ணியிருக்கிறாரா என்று தெரியவில்லை, ஒருநாளைக்கு சுமார் மூன்று மணி நேரங்களை ஜிம்மில் எக்ஸர்சைஸ் செய்து கழிக்கிறார்
இசையமைப்பாளரும்,’நான்’ பட ஹீரோவுமான விஜய் ஆண்டனி.
‘சிக்ஸ் ட்ராக்குல ரெகார்டிங் பண்றதை விட்டுட்டு என்ன பாஸ், இப்பிடி சிக்ஸ் பேக் ரிஸ்க்குல இறங்கிட்டீங்க? என்று போனில் அழைத்தால், ‘எப்பிடித்தெரிஞ்சது நான் யாருக்கும் சொல்லாத ரகசியம்?’ என்று அதிர்ச்சியடைகிறார் ஆண்டனி.
‘மியூசிக் டைரக்டரா இருக்கப்பவே நான் அப்பப்ப ஜிம்முக்குப் போயிட்டிருந்தவன் தான் பாஸ். ‘நான்’க்கு அப்புறம் பண்ணப்போறது ஒரு ஹெவி ஆக்ஷன் கதை. உடம்ப வலுவா ஏத்த வேண்டியிருக்கு.இதோ அல்மோஸ்ட் ரெடியாயிட்டேன். சீக்கிரம் ஷூட்டிங் கிளம்பவேண்டியதுதான்.ஆனா தயவுசெஞ்சி, இப்ப என் பாடி இருக்க ஷேப்ல ஸ்டில்ஸ் கேட்டு என்னை டார்ச்சர் பண்ணாதீங்க’ என்கிறார்.
டோண்ட் வொர்ரி பாஸ், நாங்க ஸ்டில்ஸ் கேட்டு செல்லமா டார்ச்சர் பண்றதெல்லாம் ஒன்லி டார்லிங்ஸைத்தான்.உங்க சிக்ஸ் பேக்கை செவன் மன்த்களுக்கு அப்புறமாக்கூட பாத்துக்குறோம்.