model-1

ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டில் 5வது இடம், சீனியர் ஸ்குவாஷ் தரவரிசையில் தேசிய அளவில் முதல் 8 இடங்களுக்குள், சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டாவது இடம் என்று அசத்தும் விளையாட்டு வீராங்கனை கோமல் ஷர்மா நடிப்பிலும் தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ அமைதிப்படை 2 –ல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத் ஜுப்லி ஹில்ஸில் நடிகர் சுமன் மகள் அனு என்கிற கதாபாத்திரத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பின் இடைவேளையில் அவர் அளித்த பேட்டி.

நாகராஜ சோழனில் உங்களது கதாபாத்திரம் என்ன..?

இந்தப் படத்தில் அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக நடிக்கிறேன். தமிழ்ப்பெண்களுக்கே உரித்தான அச்சம், மடம், நாணம் போன்ற குணாதியசங்களுடன் மரியாதை , கெளரவம் ஆகியவை மிக்க தமிழ்ப்பெண்ணாக நடிக்கிறேன்… வீட்டில் அப்பா அம்மாவுக்கு மிகவும் அடங்கிய பெண்ணாக நடிக்கும் அதே வேளையில் அநீதி கண்டு பொங்கும் வீரத்தமிழ்ப்பெண்ணாகவும் நடித்திருக்கிறேன்… படத்தைப் பார்க்கும் சகோதரிகள் அவர்களையே கண்ணாடியில் பார்ப்பது போல உணருவார்கள்…

இன்னொரு மகிழ்ச்சியான விஷயம், இதில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் தமிழ்…..எனது தாய்மாமனாக  இயக்குனர்- நடிகர் சீமான் நடித்திருக்கிறார்…

எனக்கு அவரைச் சிறந்த இயக்குனராகத்தான்  தெரியும் . ஆனால் படப்பிடிப்பின் போதுதான் தெரிந்தது அவர் அற்புதமான நடிகரும் கூட என்பது… அவருடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொண்டேன்…

இயக்குனர் மணிவண்ணனைப் பற்றி…

அவரை ஒரு திறமைகளின் கோபுரம் எனலாம்…அவரது 50 வது படம் , இன்னும் முதல் படம் இயக்கும் இயக்குனர் போலவே அவ்வளவு சிரத்தை..அவ்வளவு சுறுசுறுப்பு..எல்லாவற்றுக்கும் மேல் ஜனரஞ்சகமாக யோசிக்கும் ஆற்றல் அபாரம்… செட்டுக்கு வெளியே அவர் மிகவும் இயல்பான ஜாலியான மனிதர்… செட்டுக்குள் வந்துவிட்டாலோ செம ஸ்டிரிக்ட்… அவரது செட் மிகவும் டிசிப்ளின் ஆக இருக்கும்… பெர்பெக்‌ஷன் வரும் வரை விடமாட்டார்… அதே நேரம் அவரவருக்கு என்ன கதாபாத்திரம் என்பதை அருமையாக விளக்கிச் சொல்லி அவர்களை அந்த கதாபாத்திரமாகவே மாற்றிவிடுவார்… திறமைசாலிகளை ஒருங்கிணைத்து சிறப்பான அவுட்புட் வாங்குவதில் அவருக்கு நிகர் அவரே..

படப்பிடிப்பின் போது ஏதேனும் சுவையான அனுபவம்…

நான்  சைவம்…. அசைவ உணவுகளைக் கண்டாலே அலர்ஜி… இதை அறிந்து கொண்ட இயக்குனர் மணிவண்ணன் படப்பிடிப்பின் போது அசைவ உணவுகள் வரும் இடங்களில் அதன் வாசனை என்னை அணுகாதவாறு பெர்பியூம் அடித்து விடுவார்… நான் ஒரு சாதாரண நடிகை தான். இருந்தாலும் அந்த வாசனையால்  நான் சிறப்பாக நடிக்க முடியாமல் போய்விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவ்வாறு அவர் சிரத்தை எடுத்துக் கொண்டதை நிஜமாகவே மறக்க முடியாது…

நாகராஜ சோழன் சொல்லும் செய்தி என்ன..?

இயக்குனர் மணிவண்ணனின் படங்களை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.. அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லலாம்… அவரது அன்றைய டயலாக்குகள் இன்றும் இளமையாக இருக்கின்றன.. இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்திப் போகின்றன…

இந்தப் படத்தில் இதுவரை இருக்கும் அரசியலை அவருக்கு உரித்தான நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்… யாரையும் புண்படுத்தாமலும் யாரையும் சுட்டிக்காட்டாமலும் பொதுவான அரசியலைச் சொல்லியிருக்கிறார்.. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு முழு நீளப்பொழுது போக்கோடு அருமையான கருத்தையும் சொல்லியிருக்கிறார்…

 

தொடர்ந்து சத்யராஜுடன் இரண்டு படங்கள்…?

முதலில் சத்யராஜ் சாரைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன்…ஒரு ஜூனியர் என்றும் பார்க்காமல் சகஜமாக அவர் நடத்தினார்… மேலும் அவரைப் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் போது தூர இருந்தே நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது… மற்றபடி அவரது திறமையைப் பற்றியோ டைமிங்கினைப் பற்றியோ நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை… அவரது 200 வது படமான நாகராஜ சோழன் படத்தில் அவருடன் நடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது…

இரண்டு வருடத்தில் அவருடன் இரண்டு படங்கள் என்பது ஒரு Co-incident அவ்வளவே…

சரி…அழகும் இளமையும் இருக்கிறது அப்படியும் இரண்டு வருடத்தில் இரண்டு படங்கள் என்பது மிகவும் குறைவுதானே..?

ஆம்… ஆனால் நான் நல்ல கதைகளில் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்கிற முடிவில் இருக்கிறேன்… எவ்வளவு பெரிய இயக்குனர் , தயாரிப்பு நிறுவனம் எனபது முக்கியமில்லை… எனது கதாபாத்திரம் எந்த அளவிற்கு உருவாக்கப் பட்டிருக்கிறது.. அது எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறதா என்பதைப் பொறுத்தே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்…

சவாலான கதாபாத்திர அமைப்புடன் கூடிய முழு நீளக் கதாநாயகியாக நடிக்கும் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது… பார்க்கலாம் 

விளையாட்டு வீராங்கனை நடிகை?

விளையாட்டு என்பது அதிமாக உடலுழைப்பைச் சார்ந்திருக்கிறது… மனதளவில் ஜெயிக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டும் போதுமானது…

நடிப்பு என்பது முழுக்க முழுக்க எக்ஸ்பிரசன்களைச் சார்ந்து இருக்கிறது… உடல்மொழியுடன் சிறந்த முகபாவனைகளையும் வெளிப்படுத்த வேண்டும்… மேலும் நடிக்கும் போது நம்மால் பலதரப்பட்ட கதாபாத்திரங்களாக வாழமுடியும்… அதற்கு நடிப்பு மட்டுமே வாய்ப்பு அளிக்கிறது…

விளையாட்டு வீரராக இருப்பதால் நமது உடல் ஆரோக்கியத்தையும் உடலமைப்பையும் சரியாக வைத்துக் கொள்ள முடிகிறது.என்கிறார் கோமல்ஷர்மா. நீங்க சொன்னா அது சரிதாம்மா.

model

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.