தமிழில் ‘சிங்கம்2’வோடு தனது படங்களின் கமிட்மெண்டை முடித்துக்கொண்டு புதுப்படங்கள் எதிலும் ஒப்பந்தமாகாமல் இருக்கும் அனுஷ்கா, 2014-ன் மத்திய மாதங்களோடு, கைவசம் இருக்கும் இரண்டே தெலுங்குப் படங்களையும் முடித்துவிட்டு, ஒரேயடியாக சினிமாவுக்கு குட்பை சொல்லப்போகிறாராம்.
படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி, சுமார் ஒரு கோடிக்கும் குறைவில்லாமல் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் அனுஷ்கா, செல்வராகனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தை முடித்தபிறகு, தமிழில் ‘சிங்கம்2’ வில் தவிர புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. தெலுங்கில் அவருக்காகவே கதை உருவாக்கப்பட்ட ‘ருத்ரம்மா தேவி’ மற்றும் ராஜமவுலியின் ‘பஹுபாலி’ ஆகிய இரண்டுமே அனுஷ்காவின் கனவுப்படங்கள். இரண்டு படங்களுமே முறையே 60 மற்றும் 80 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் மெகா படங்கள்.
மேற்படி இரண்டு படங்களும் முடிய, அநேகமாக 2014 ஜூன் வரை ஆகலாம். அதன்பிறகு, தான் இதுவரை, தனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரிவிக்காத, தனது காதலரை மணந்து, சினிமா இல்லாத மூன்றாவது உலகத்தில் அனுஷ்கா செட்டில் ஆகவிரும்புகிறாராம்.அடுத்து ரிலீஸாகவிருக்கும் நான்கு படங்களையும் பார்த்துவிட்டுத்தான் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்த மனம் வருமா என்று முடிவு செய்ய முடியும்.