david-1

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்பட நாயகன் ஆடிய அதே கிரிக்கெட் கிரவுண்டில்டேவிட்பட இயக்குனர் பிஜய் நம்பியாரும் சமீபத்தில் கிரிக்கெட் விளையாடியிருக்கக்கூடும்.’ நகொபகநாயகனுக்கு பின்னந்தலையில் அடிபட்டு பெடுளா,சரி விடுளாமறதிநோய் ஏற்பட்டதுபோல், பிஜய்க்கு சைடு மண்டையில் அடிபட்டுசர்ரியலிஷ சைடுளா ப்ளேடுடாவியாதி ஏற்பட்டிருக்கவேண்டும்.

ஏனெனில்டேவிட்கதை இயல்பான புத்தி சுவாதீனம் கொண்டவர்கள் யோசிக்கக்கூடிய சாதாரணகதையே அல்ல.

சினிமா தீவிரவாதிகளிடமிருந்து சிறுபான்மையாகிய எங்களைக் காப்பாற்றுங்கள்என்று போர்க்கொடி தூக்க ஆரம்பித்திருக்கும் இஸ்லாமியர்களின் வழியில், தொடர்ந்து பந்தாடப்படுவதிலிருந்து பந்தோபஸ்து கேட்டு,கிறிஸ்தவ பாதிரியார்களில் பாதியர்களாவது சர்ச்சிலிருந்து இறங்கிவந்து சர்ச்சையில் ஈடுபடவேண்டிய நேரம் இது.

டேவிட்ஒரு பெயர் இரு இம்சையின் கதை இதுதான். ஒரு டேவிட்,[அதாவது ஜீவா டேவிட்] இதுக்கு டெர்ரரிஸ்ட் எவ்வளவோ தேவலை என்று சொல்லவைக்கும், மும்பையில் தெருத்தெருவாய் சங்கீதம் சொல்லிக்கொடுக்கும் கிடாரிஸ்ட். அப்பா நாசர் கிறிஸ்தவ மத போதைகார். கதை என்ற பெயரில் நம்மை பேஜார் நம்பியார் செய்வது போலவே, அவரை இன்னொரு மதத்தினர் வந்து அடித்து துவம்சம் செய்கிறார்கள்.

இன்னொரு அக்ரமமான விக்ரம் டேவிட் கோவாவில் மீனவர். தொழில் தர்மத்துக்காக ஒரே ஒரு காட்சியில் ஒரே ஒரு மீனைப் பிடித்துவிட்டு, சதா குடித்துக்கொண்டே இருக்கிறார். இவர் கையில் பாட்டில் இல்லாத காட்சியே இல்லை என்பதால், படம் முழுக்கவே விக்ரம் வரும் பின்னே, ‘குடிப்பழக்கம் குடல் நலத்திற்கு தீங்கானதுசப்டைட்டில் வருதுமுன்னே.

இவரது நண்பர் பீட்டருக்கும், காது பேசாத, வாய் கேட்காத ஊமையுமான, இஷா ஷெர்வானிக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், நட்புக்கு துரோகம் செய்துவிட்டு, ஷெர்வானியை லவட்ட்டிக்கொண்டு ஓடிவிடலாமா என்று யோசித்து, கடைசியில் அப்படிச் செய்யாமல் விட்டுவிடுகிறார். ஏனென்றால்பீட்டர்கள்தான் பீட்டர்களாக இருக்கமுடியும். ஒரு போதும்டேவிட்கள் பீட்டர்களாக முடியாது என்று சில கிலோ மீட்டர் நீளத்துக்கு வசனங்கள் ஜெபிக்கப்பட்டு, ’இறைவன் சித்தம் அப்படி’. என்று முடிகிறது கதை.

என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியலை பாஸ். வர வர உங்க இம்சை ஓவரா இருக்குஎன்று நினைப்பவர்கள், தியேட்டர்கள் இல்லாத குக்கிராமம் ஒன்றுக்கு, கொஞ்ச நாளைக்காவது என்னைக் குடியமர்த்தும்படி, வேண்டி விரும்பி, மனம் வெதும்பி, கண்ணீர் ததும்பி கேட்டுக்கொள்கிறேன்.

நடிப்பு விவகாரத்தில் சைத்தான் விக்ரம், குட்டி சைத்தான் ஜீவா தொடங்கி, பியூட்டி பார்லர் நடத்திவரும் பாட்டி தபு வரை நாஸ்தி பண்ணியிருக்கிறார்கள். நாசருக்கு மேலும் ஒரு நான்ஸ்டாப் நான்சென்ஸ்.

இசையை, நம்ம கொலவெறி பாய் அனிருத்தில் தொடங்கி, கேரளா முதல் மும்பை வரை, ஆறுபேர் கூறு போட, ஒரு டேவிட்டை ரத்னவேலும், மற்றொருடேவிட்டை பி.எஸ். வினோத்தும் ஒளிப்பதிவியிருக்கிறார்கள்.

கதையிலேயே நம் மதி மங்கி, தொங்கிப்போய்விடுவதால் மற்ற டெக்னிக்கல் சமாச்சாரங்கள் குறித்து சம்சாரிக்க,உடலில் தெம்பு இல்லை.

தயாரிப்பு ரிலையன்ஸ் நிறுவனம். மணிரத்னத்தின் சித்தி பொண்ணு உட்பட வேறு சில நிறுவனங்களுடன் அலையன்ஸ் வைத்துடேவிட்களை தயாரித்திருக்கிறார்கள்.

படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான வசனம்கோடியில ஒருத்தருக்குத்தான் எல்லாத்தையும் தாங்குற வலிமையை கர்த்தர் குடுத்திருக்காரு’. அந்த வலிமை கிடைக்கப்பெற்றவர்கள் மட்டுமே பார்க்கவேண்டிய படம்டேவிட்’. மற்றவர்கள் கர்த்தரை நோக்கி கூவ வேண்டிய வசனம்ஏலி ஏலி லாமா சபக்தானி’ [ என் தேவனே என் தேவனே ஏன் எம்மை கைவிட்டீர்?]

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.