’ சட்டென்று மாறுது வானிலை, ,,தியேட்டரில் பெய்தது வசூல் மழை,.. வந்த பணத்தை பொட்டியில் வைக்க இடமில்லை,. மணிரத்னத்தின் ‘கடல்’ ஒரு பெரும்பிழை’ என்று கவுதம் மேனனின் பாடலைப்பாடிய படியே, மணியின் அலுவலகம் மற்றும் வீடுகளை முற்றுகையிட விநியோகஸ்தர்களும், தமிழகம் முழுக்க உள்ள தியேட்டர் அதிபர்களும் விரைந்துகொண்டிருக்கின்றனர்.
சமீப சில வருடங்களாக தொடர்ந்து ஓடாத படம் எடுக்கும் ஒரே இயக்குனர் என்ற பெயரைப்பெற்றுவரும் மணிரத்னத்தின் கடல் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. படம் ரிலீஸான அனைத்து தியேட்ட்ர்களுமே ஆள் அரவமற்று ஆக பல ஆபரேட்டர்கள் அடுத்தடுத்த காட்சிகளுக்கு, பேச்சுத்துணைக்காவது ஆள் தேடவேண்டியதாயிற்று. இதற்கு முன்புவரை இவரது ‘இருவர்’ படமே தியேட்டர்களில் ஒருவர் கூட பார்க்காத படமாக தமிழ்சினிமாவின் ஆல்டைம் ரெகார்டாக இருந்தது. ’கடல்’ அதனை முறியடித்து வாங்கிய அனைவருக்குமே குழிபறித்துவிட்டதாம்
இந்தப்படத்தை படம் துவங்கும்போது, ரெண்டு பொடிப்பையல்கள் ஜட்டியோடு நிற்பார்களே அந்த ஜெமினி நிறுவனம் வாங்கியிருந்தது.தற்போது படத்தின் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் அந்த ஜட்டி கூட மிஞ்சுமா என்று தெரியாத நிலையில் அனைவரும் கூடி இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாகத்தெரிகிறது.
இதையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது நடிகை சுஹாசினிக்கு ராகு காலம் ரவுண்டு கட்டி அடிக்கிறது என்பது தெரிகிறது. இரு தினங்களுக்கு முன்புவரை அவரது சித்தப்பாவை ஏகப்பட்ட பேர் முட்டுச்சந்தில் வைத்து முரட்டு அடி அடித்தார்கள். அடுத்து அவரது அவரது கணவரை மூத்திரச்சந்துக்கு அழைத்துப்போக இதோ ஒரு கூட்டம் கிளம்பிப்போய்க்கொண்டிருக்கிறது.
மணி ரொம்ப நல்லவருங்க அவரை எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு,..