moneyரத்னத்துக்கு முதல் படம் தொட்டே, சினிமா ஒரு கலை என்பதைத்தாண்டி ஒரு வியாபாரம் என்பதாகவே அவர் படித்த எம்.பி.ஏ. படிப்பு, தொடர்ந்து அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தது. அதனால் இதுவரை ஒரு படத்தில்கூட, அவருக்கு நெருக்கமான வாழ்க்கையை அவர் படமாக்க முனைந்ததில்லை.
ஒரு பேப்பர் கட்டிங் செய்தியைப் பார்த்தவுடன் அவருக்கு ‘ரோஜா’ பூக்கிறது. முஸ்லிம்கள் கலவரம் அவருக்கு ‘பம்பாய்’ ஆகிறது. அத்தைக்கு மீசை முளைத்தால்,..? ராவணன் மீது சீதைக்கு சபலம் வந்தால்,,? என்ற ஒரு வரி ட்விஸ்ட் மல்டி லாங்குவேஜ் அவதாரம் எடுத்து,அவருக்குப் பொன்னைக்கொட்டிவிட்டு, வசூல் ரீதியாக மண்ணைக் கவ்வுகிறது.
தற்போதைய கடலும், அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்’ “ஆன் போர்ட் கார்த்திக்கின் பையன் கவுதமும், ராதாவின் பொண்ணு துளசியும் வந்தவுடன் இது ஒரு வெற்றிப்படம் என்று எனக்குத்தோண ஆரம்பித்துவிட்டது.”- இது படத்தின் ஆடியோ ரிலீஸ் தினத்தன்று, அதிகம் பேசாத மணிரத்னம் கொஞ்சமாய் சொன்னது.
அந்த கால்குலேசனுக்கு அப்புறம், இச்சகம் போற்றிடும், கதை வித்தகன் [ஒரே கதையை ரெண்டு கம்பெனியில வித்தவன்] செயமோகன் அழைக்கப்படுகிறார். ’ ஏலே செருக்கிபுள்ள, மக்கா தக்காளித்தொக்கா’ என்ற ஏரியா டச் வசனங்களுடன் ‘உப்புப்பெறாத’ ஒரு கதையைக் கையிலெடுத்து, மீனவர்களை எவ்வளவு கொச்சைப்படுத்தமுடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப் படுத்தி, கடற்கரையில் கும்மி அடித்திருக்கிறார்கள் மணிரத்னம் கோஷ்டியினர்.
பாவம் கிறிஸ்தவ பாதிரியார்கள். நல்லவர்கள், கற்பழிப்புப் பாதிரிகள் இருதரப்பினருமே வெட்கித்தலைகுனியும் அளவுக்கு சுரத்தற்ற, கதை மற்றும் காட்சி அமைப்புகள். அதிலும் துளசி மற்றும் கவுதம் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் அய்யராத்தில் மீன்பிடிக்க தூண்டிலோடு போன கதையை விட கேவலம்.
அரவிந்தசாமியும், அர்ஜுனும் பாதிரியார் ஆக மாற கற்க வருகிறார்களாம். அரவிந்தசாமி நல்லபடியாக கற்க, அர்ஜுனோ கற்பழிப்பில் இறங்க, ஷிஃப்ட் முறையில் கொஞ்ச நாள் அரவிந்தசாமியிடமும், கொஞ்சநாள் அர்ஜுனிடமும் வேலைசெய்யும் கவுதம், மூன்று வயதுக்கு அப்புறம் மூளை வளர்ச்சி காணாத துளசியிடம் காதலில் கிறங்க, நன்றாக அடித்துப்போட்டது போல் ஆடியன்ஸ் உறங்க, அட இதைப்போய் ஒரு கதைன்னு எழுதின குரங்கே?
காதுக்குள்ளே கொஞ்சநாளாக ஒலித்துக்கொண்டிருந்த, ரகுமேனின் ‘நெஞ்சுக்குள்ளே’ பாடலுக்கு கடற்கரையில் குழிதோண்டி சமாதி கட்டியிருக்கிறார்கள். [இந்து சாமிகள் பற்றிய பாடலுக்கு இசையமைக்கமாட்டேன் என்று தான் ‘பாய்ஸ்’ ஆக இருந்த காலம் தொட்டு இன்றுவரை பிடிவாதம் பிடித்து வரும் ரகுமேன், கிறிஸ்தவ கீதங்களை மட்டும் எப்படி இவ்வளவு சின்சியராக சிங்க்ரனைஸ் பண்ணினார் என்று யாராவது கேள்வி எழுப்பி, மும்மதக்கலவரத்துக்கு வழி வகுத்தால் இன்னும் விஸ்வரூபமாக குளிர்காயலாமே?]
இலக்கியவியாதிகளை தமிழ்சினிமா அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை என்ற கூற்றைப்பொய்யாக்கும் விதத்தில், சமீபத்தில் பல சினிமா இயக்குனர்கள் நடந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கும் வேளையில், ‘கடல்’-ல் கதை, திரைக்கதை, வசனம்’ என்று, தனது தனது டைரக்ஷன் கோவணத்தைத் தவிர அத்தனையையும் அவிழ்த்து தந்திருக்கிறார் மணிரத்னம்.
ஆனால் ஜெயமோகன்?
படத்தின் துவக்க காட்சியில், நாயகனின் அம்மாவை புதைக்கக் கொண்டுபோவார்கள். அந்தப்பெட்டிக்குள் அப்பெண்மணியின் உடல் அடங்காமல் கால் மட்டும் வெளியே துருத்திக்கொண்டிருக்க, பார்க்கிறவர்கள் அறுவெறுப்படையும் வண்ணம் அந்தக்கால்களை அடித்து நொறுக்கி சவப்பெட்டிக்குள் கொண்டுபோவார் பொன்வண்ணன்.
படம் முடியும் தறுவாயில், பொன்வண்ணன் செய்த கால்களை முடக்கும் காரியத்தை ஜெயமோகன் கனகச்சிதமாக செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
அந்தக்கால்களுக்கு சொந்தக்காரர் யார் என்பதை சொல்லியா தெரியவேண்டும்?
‘கடல்’ உடல்நலத்திற்கு தீங்கானது.