வெள்ளிக்கிழமை ராமசாமி மாதிரி, இருநாட்கள் மட்டுமே ‘கடல்’ ஓடியதால், சனிக்கிழமை மணிரத்னம் என்று வெறுப்புடன் விநியோகஸ்தர்களால் அழைக்கப்படும் சனிரத்னம், சிலர் வீட்டுவாசல் வரை வந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்திருப்பதில் சங்கடத்தில் ஆடிப்போயிருக்கிறாராம்.
படத்தை விலைக்கு வாங்கிய ஜெமினி, ‘நாங்கள் மணிரத்னத்திடம் அநியாய விலைக்கு வாங்கி ஏமாந்துவிட்டோம். எங்களுக்கு இதில் லாபம் எதுவுமில்லை’ என்று கைவிரித்து, மணி, சின்னபட்ஜெட்டில் எடுத்து விட்டு, பெரும் ’மணியை’ சுருட்டிய கதையை சுட்டிக்காட்டிய பிறகே, விநியோகஸ்தர்கள் மணியின் இல்லத்திற்கு ஏகியிருக்கிறார்கள்.
சும்மாவே மவுனசாமியாக இருக்கும் மணி இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு எப்படி வாயைத்திறப்பார்? இழந்த பணத்தை திரும்பக்கேட்டு விநியோகஸ்தர்கள் மூன்று நாட்களாக காட்டுக்கத்தல் கத்தியும் மணி மவுனமாக இருப்பதால், நாளை திங்களன்று சிலர் தங்கள் உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தற்கொலை செய்யவிருப்பதாக மிரட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில் சற்றுமுன்னர், மண்ணெண்ணை அலுவலகத்திலிருந்து,. ஸாரி மணிரத்னம் அலுவலகத்திலிருந்து ஒரு அவசர அறிக்கை வந்திருக்கிறது.படம் போலவே ஆங்கிலம், தமிழ் என்று மல்டி லாங்குவேஜில் அந்த அறிக்கை என்ன சொல்ல வருகிறதென்றால்,.. அதாவது படத்தை ஜெமினி நிறுவனத்துக்கு வித்தாச்சி,இப்ப ’கடல்’ படத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. மண்ணெண்ணை டின்னைத்தூக்கிட்டு, ப்ளீஸ், ஜெமினி லேப்பாண்ட போங்கோ.’
சரி, ‘கடல்’ படத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. மெட்ராஸ் டாக்கீஸுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு அடுத்த படத்துல சொல்வேளோ?