கடந்த வாரம் சென்னையில் வல்லினம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நகுல், ஜெகன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். படத்தின் நாயகி மிருதுளா என்கிற புதுமுகத்தை அறிமுகப்படுத்தி இயக்குனர் பேசினார்.
படத்தின் வெளியீட்டு விழா முடிந்ததும் மேடையின் ஓரத்தில் நின்றவரை ஓரங்கட்டினோம் என்ன சார் அது வல்லினம் என்றோம்.
“ஆதிகாலத்தில் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு வாழ்ந்த மனிதன் பிற்பாடு அந்த வேட்டைத் தொழிலில் ஈடுபடத் தேவையில்லாது போன போதும் அதை மீண்டும் தொடரும் வழியாக விளையாட்டைக் கண்டுபிடித்தான். விளையாட்டு என்பது வன்முறையை மென்மையாக்கும் ஒரு கருவி. அதனாலேயே படத்துக்கு வல்லினம் என்று பெயர் வைத்தேன்.”
இப்படம் ‘கில்லி’யில் கபடி விளையாட்டு போல கூடைப் பந்து விளையாட்டு பற்றியதா?
“இப்படம் கூடைப்பந்து விளையாட்டையும் பற்றியது. பொதுவாக விளையாட்டைப் பற்றியது. பொதுவாக விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களில் இரு அணிகள் மோதிக்கொள்ளுதல் அவர்களுக்கிடையயான பிரச்சனை மற்றும் கடைசியில் யார் வெற்றி பெற்றார் என்பதாகவே இருக்கும். இப்படத்தில் புதுமையாக கிரிக்கெட் விளையாட்டிற்கும் கூடைப்பந்து விளையாட்டிற்கும் நடுவே எழும் பிரச்சனையாக கதை இருக்கிறது. விளையாட்டுக்குப் பின்னால் இன்னொரு உலகம், அரசியல் இயங்குகிறது. அதைப் பற்றிப் பேசுகிறது இப்படம். மெல்லினமாக படத்தில் ஒரு காதலும் உண்டு.”
அது சரி படம் இவ்வளவு நாள் டிலே ஏன் ஆனது. ஒரு வருஷம் நடக்குற டெஸ்ட் மாட்ச் மாதிரி?
“படத்தோட திரைக்கதையை எழுதி முடிக்க ஆறுமாதம் ஆனது. ஆனால் அதைப் படமாக்கத்தான் இரண்டு வருஷம் ஆகிவிட்டது.” என்று வருத்தப்பட்டார்.
ஏன் இவ்வளவு நாள். என்ன பிரச்சனை?
“யாருடனும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நேரம் என்றே சொல்ல வேண்டும். படத்துக்கு நடிக நடிகைகளை ஒப்பந்தம் செய்யவே ரொம்ப நாள் ஆயிடுச்சி. ஒரு பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தமாகி இரண்டு நாள் ஷூட்டிங்கும் போய்விட்டது. திடீர்னு நடிக்க இஷ்டமில்லைன்னுட்டுப் போயிட்டார். ஏன்னு கேட்டதுல, அவருக்கு கதைல முக்கியத்துவம் இல்லைன்னு அதனால் முடியாதுன்னுட்டார். அப்புறமும் ஷூட்டிங் நடக்கும் போதெல்லாம் ஏதாவது தடங்கல்கள் பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்தன.”
பிரமிளாவை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? அவங்க வயதை இப்படி அப்பட்டமா போட்டு உடைச்சிட்டீங்களே.
“அதற்குப் பின் மீண்டும் நடிகை தேடும் படலம் தொடங்கியது. நிறைய பேருக்கு டெஸ்ட் எடுத்து கடைசியில் பெங்களூரைச் சேர்ந்த பிரமிளாவைத் தேர்ந்தெடுத்தோம். அவர் நல்ல கலகலப்பாக பழகும் பெண். விளையாட்டு பற்றிய படம் என்பதால் எல்லா நடிகர்களுக்கும் கொஞ்சம் விளையாட்டு பயிற்சியும் கொடுத்தோம்.”
அது சரி பிரமிளா ஏன் உங்களை மட்டும் அண்ணான்னு சொல்ல மாட்டேங்குறாங்க?
“ஷூட்டிங் ஸ்பாட்டுல எல்லோர் கிட்டவும் உரிமையா அண்ணான்னு சொல்லி ஒட்டிக்கிச்சு அந்தப் பொண்ணு. நான் டைரக்டர் என்பதால் மரியாதையாக கூப்பிடவேண்டும் என்று நினைத்திருக்கலாம். இதை வெச்சுகிட்டு ஷூட்டிங் ஸ்பாட்ல நகுல், ஜெகன் எல்லோரும் சேர்ந்து அவரை ஏன் அண்ணான்னு கூப்பிடலை அப்படின்னா வேற ஏதும் நினைப்பா மனசுலன்னு கிண்டலடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நகுல், நான், தமன் எல்லாம் பாய்ஸ் படத்துலேர்ந்தே ப்ரண்டஸ். அதனால அவங்க என்னை கலாய்க்கிறதெல்லாம் சகஜம்” என்றார் பின்னால் தலையைச் சொறிந்தபடி.
அப்போ கண்டிப்பா சொல்றோம் ஏதோ உள் விவகாரம் இதுல இருக்கு பாஸ் (ஏதோ நம்மால முடிஞ்சது.)
இங்கே பாருங்கள் வல்லினம் ட்ரெய்லர்