prabu-deva-next-movie

இந்தியில் பிரபுதேவா முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராகி விட்டார். இந்தியில் சம்பளம் மற்றும் மார்க்கெட் பெரிது என்பதாலும் அவருக்கு தற்போது நல்ல டிமாண்ட் இருப்பதாலும் தமிழ், தெலுங்குப் பக்கம் வர மனமின்றியே இருக்கிறார்.

பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் பிரபுதேவாவை அவர் படத்தில் நடிக்கும் கதாநாயகிகளை இணைத்து பரபரப்பாய் கிசுகிசுக்கள் டெங்குபோல் பரவிக்கொண்டிருக்கிறதாம். தற்போது கோ படத்தை இந்தியில் அஜய்தேவ்கான்- சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இயக்கவிருக்கிறார் பிரபுதேவா. இதன் சில பாடல் காட்சிகளுக்கான ரிகர்சலில் பிரபுதேவாவுடன் நெருங்கி நடனமாடினாராம் சோனாக்ஷி. அப்போது எதுவோ பற்றிக்கொண்டது போல எல்லோரும் கிசுகிசுக்கிறார்களாம். இதுதான் இப்போது பாலிவுட்டில் பரவியிருக்கும் லேட்டஸ்ட் டெங்குவாம்.

சோனாஷியோ இந்த மாதிரி கிசுகிசுக்கள் இயக்குனர் கூடவா வரவேண்டும். அது மார்க்கெட்டுக்கு பெரிய அளவில் உதவுமா என்கிற ரீதியில் நினைக்க ஆரம்பிக்க, பிரபுதேவாவோ எது பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் வழக்கம் போல ஜாலியாக தனது வேலையைப் பார்த்தபடி இருக்கிறார். சாக்கிரதை சோனாக்ஷி.. அப்புறம் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சின்னு யாராவது பாடவேண்டிய நிலை வந்தாலும் வரும்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.