laxmi-menon-films-news

கும்கி படத்தில் அறிமுகமாகிய லட்சுமி மேனன் சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு என்று வரிசையாக ஹிட்கள். குட்டிப் புலி நடுவில் சுமாராகப் போனாலும் மொத்தத்தில் ராசியான நடிகை என்கிற இமேஜ் ஏற்பட்டுவிட்டது. தனது சம்பளத்தையும் 40 லட்சம் என்று கூட்டிவிட்டாராம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டியது தானே.

விஷாலுக்கு தான் தயாரித்து இவருடன் நடித்த பாண்டிய நாடு ஹிட்டானதில் பெரும் மகிழ்ச்சியாம். அதனால் தனது தயாரிப்பில் திரு இயக்கவிருக்கும் தனது அடுத்த படமான ‘நான் சிகப்பு மனிதன்’ இலும் இவரையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துவிட்டார். இது போக சித்தார்த்துடன் ஜிகர்தண்டா, விமலுடன் மஞ்சப்பை, விஜய்சேதுபதியுடன் வசந்தகுமாரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர்கள் மற்றும் இளம் இயக்குனர்கள் கதை சொல்ல இவரை அணுகியபடியே இருக்கின்றனராம்.

தற்போது அதிக படங்கள் ஒப்புக்கொண்டுவிட்டபடியால் இனிமேலும் ஒப்புக்கொள்ளும் படங்களுக்கு கதை கேட்டு பின்னரே ஒப்புக்கொள்ள முடிவுசெய்திருக்கிறாராம். புதுமுக இயக்குனர்கள் கவனிக்க.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.