nazriya-nasim-birthday-news

2013 ஆம் ஆண்டின் தமிழ் திரையுலகின் பளிச் கண்டுபிடிப்பு நசிரியாதான் . இளமை கொஞ்சும் குறும்புடன் அறிமுகமாகி உடன் நடிக்கும் நடிகர்களிடம்
இப்படி ஒரு திறமை பார்த்ததில்லை என  பாராட்டப்படும் நசிரியாவுக்கு  சென்ற டிசம்பர் 20 பிறந்த நாள் .

‘ நடிகையாக இது என்னுடைய முதல் பிறந்த நாள் . இத்துடன் என்னுடைய முதல் படமும் என்னுடைய மிக முக்கிய படமுமான ‘ திருமணம் எனும் நிக்கா’  திரையிடப்பட  தயாராக இருக்கிறது. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பிரியா , என் இயல்பான சுபாவத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் இது.  

புதுமுக இயக்குனர் அனீஸின் வித்தியாசமான காதல் கதை இது. எனக்கு ஜோடியான ஜெய் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியராக இப்படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்திலும் என் பாத்திரத்தை ரசித்து நடித்தேன்.  இப்படம் அடையும் வெற்றியின் மூலம் வரும் 2014 எனக்கு நல்ல ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன். இந்த இனிய பிறந்த நாளில் எனக்கு  ஊக்கமும் , ஆதரவும் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார் ..

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.