channel4-video-lanka-march9

2009ல் நடந்த போர்க்குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் கூலாக ராஜபக்ஷேவும், இந்தியாவும் ஒன்னுமே நடக்கலைன்னு சொல்லிக்கொண்டேயிருக்க திடீரென்று மனிதநேயர்கள் அவதாரம் எடுத்திருக்கும் அமெரிக்காவும், பிரிட்டன் பிரதமர் கேமரூனும் இந்த விஷயத்தில் ஐநாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என்று ‘சும்மா ஒழுங்கா நீங்களே விசாரிக்கிறீங்களா? இல்லை நாங்க விசாரிக்கவா’ என்று

சும்மா ஒப்புக்கு கேட்டிருக்கிறார்கள். அப்படியென்றால் பிண்ணணியில் பேரம் இன்னும் படியவில்லை என்று அர்த்தம். அதேசமயம் மஹாப் பெரிய கம்யூனிஸ்ட் சிங்கங்களான ரஷ்யா, சீனா, கியூபாவெல்லாம் அங்கே ஒன்னுமே நடக்கலைன்னு ராஜபக்ஷே கூட நின்னு சூடம் ஏத்தி சத்தியம் பண்ண ரெடியா இருக்காங்க.

சேனல் – 4 இந்த முறை வெளியிட்டிருக்கும் வீடியோவில் சிங்கள இராணுவத்தினரின்’உயிரோட செஞ்சிருக்கலாமா .. எதுக்குடா.. செத்தபின்னாடி செஞ்சாதான் நல்லாருக்கு’ என்பது போன்ற வக்கிரமான பேச்சுக்களும் இடம் பெற்றிருக்கின்றன. மறைவான பாகங்களை வெளித்தெரியும்படி ஆடைகளை ஏற்றிவிட்டு சுற்றி நின்று சிரித்தபடியே படமெடுக்கும் சிங்களர்கள். மேலாடையில்லாமல் சிங்கள ராணுவவீரர்களால் அழைத்துவரப்படும் இசைப்பிரியா பின்பு கற்பழிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு கிடப்பது. இப்படி மனதை அழுத்தும் விஷயங்கள் பல இருக்கின்றன இந்த 10 நிமிட படத்தில்.

இந்தப் படத்தை வெளியிட்டுள்ள சேனல் – 4 ஐ சிங்கள அரசாங்கம் வழக்கம்போல கண்டித்துள்ளது. இந்த வீடியோக்கள் போலியானவையல்ல என்று ஒரு குழு ஆராய்ந்து சொன்ன பின்பும் ராஜபக்சே இதெல்லாம் சும்மா என்கிறான். பிரிட்டனும், அமெரிக்காவும் இந்த இனப்படுகொலைகளை வெறுமனே மனித உரிமை மீறல் என்று மட்டும் சுருக்கி இலங்கையிடம் லாபம் சம்பாதிக்க நினைக்கின்றன.
அவர்கள் போனமாதம் கொண்டு வந்த கண்துடைப்பு தீர்மானமும் ராஜபக்சேவையே அவனுடைய குற்றங்களை விசாரிக்கத் தான் சொல்வதோடு, தமிழர்கள் தனி இனம், நடந்தது ஒரு இனப்படுகொலை என்பதை முற்றிலும் நிராகரிக்கிறது.

மறத்தமிழன் வைகோ பா.ஜ.க பின்னால் போய் நின்று கொள்வதும் (மத்தியப் பிரதேச மாநில அரசு பா.ஜ.கவின் முதலமைச்சர் ஷிவ்ராஜ் சௌகான் தான் ராஜபக்ஷே புத்தர் கோவிலுக்கு சென்ற ஆண்டு வந்தபோது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது),ராமதாஸ், கலைஞர் போன்றவர்கள் இந்தத் தேர்தலில் ஈழப் பிரச்சனைபற்றி வாயே திறவாது போனதும் நடந்திருக்கிறது. அம்மாவின் தீர்மானங்கள் அம்மா ஈழ ஆதரவு ஓட்டு வாங்கிக்கொள்ள கண்டிப்பாக பயன்படும். தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு சக்தியும் நிஜமாகவும் நேர்மையாகவும் இல்லை என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இதில் எந்தக் குதிரையை நம்பி ஆற்றில் போவது என்பது ஒரு கேள்விக்குறி.

தேர்தல் மாற்றங்கள் இந்த ஈழப் பிரச்சனையை எங்கனம் பாதிக்கும். பாதிக்காது என்பதை தேர்தல் முடிவுகளையும் அதில் ஏற்படும் கூட்டணிகளையும் வைத்து முடிவு செய்யலாம். காங்கிரஸ் மீண்டும் போங்காட்டம் செய்து ஆட்சிக்கு வந்தால் தமிழர் கதி அதோகதி தான். கம்யூனிஸ்ட்டுகளின் மூன்றாம் அணி வந்தால்  13வது சட்டத் திருத்தம் என்று வற்புறுத்தலோடு நிற்கும். மோடி வந்தால் உள்நாட்டு வெளிநாட்டுப் பிரச்சனைகளை ஊதி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இதை கையில் எடுப்பாரா இல்லையா என்பது அவரது அமெரிக்க விசுவாசத்தால் முடிவு செய்யப்படும். மொத்தத்தில் ஈழத்தில் நமது தமிழரின் எதிர்கால வாழ்க்கை அமெரிக்கா போன்ற யாரிடமோ தான் உள்ளது.

http://www.youtube.com/watch?v=N4EpNor77MA

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.