ஷங்கரின் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பெருமளவில் முடிந்துவிட்டதைத் தொடர்ந்து விக்ரம் கோலிசோடா விஜய்மில்டனின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
படத்திற்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. தற்போதைக்கு படத்தின் தலைப்பு ‘ஐந்து’ என்று வைத்திருக்கிறார்கள். படத்திற்கு இசை இமான். படப்பிடிப்புக்கு கிளம்புமுன் இமானிடம் காட்சிகளை விளக்கிவிட்டு சில மெட்டுக்களை போட்டுத்தரும்படி கேட்டுவிட்டு போயிருக்கிறார் வி.மி.
திரும்ப வந்து இமான் போட்ட ட்யூன்களைக் கேட்ட வி.மி. திருப்தியில்லாமல் ‘என்ன எளவு ட்யூன் இது?’ என்கிற ரேஞ்சில் கோபமாகக் எகிற, இமானோ ‘நான் என்ன புதுமுக மியூசிக் டைரக்டரா எனக்கு நீங்கள் பாடம் எடுக்க?’ என்று பதிலுக்கு எகிற முட்டிக் கொண்டுவிட்டதாம்.
விஜய் மில்டன் இமானை நீக்கிவிடலாமா என்று யோசிக்க தயாரிப்பாளர்களோ ‘இந்தமாதிரி சின்னச் சின்ன பிரச்சனைக்கெல்லாமா இவர் ‘ஈகோ’ பார்த்து நிற்பது?’ என்று கேட்டார்களாம்.பின்பு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வந்து இருவரிடமும் பேசி சமரசம் செய்துவைத்தார்களாம். இப்போது மீண்டும் படத்தின் இசை வேலைகள் ஆரம்பித்துவிட்டது.
“வி.மி. சார் கோலிசோடாவில் தான் ஏதோ நல்ல டைரக்டர் என்று சுமாரா பெயர் வாங்க ஆரம்பிச்சிருக்கீங்க. அதுக்குள்ள தலைக்கனம் பிடிச்ச டைரக்டர்ன்ற பேரும் உங்களுக்கு வேணுமா?”