shreya-dhinakar-director

இது ஒரு திரைப்படத்தின் பெயர். கன்னடத் திரைப்படமான இதை இயக்கியவரும் பதினைந்தே வயதான ஒரு பேபிதான். அவர் பெயர் ஷ்ரியா தினகர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதுடன் படத்தில் நடித்தும் உள்ளார் ஷ்ரியா. இந்தப் படத்தை இயக்க இவருக்கு ஆலோசனை

சொன்னவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.

இளம் வயதிலேயே இயக்குனராகியிருக்கிறீர்கள். சினிமா இயக்கவேண்டும் என்று எப்படித் தோன்றியது?

என் பெற்றோர்கள்தான் முக்கிய காரணம். சிறுவயதிலேயே விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் போல ஆகவேண்டும் என்பது எனது ஆசை. சிறு வயதில் பைலட் ஆகவேண்டும் என்று எனது பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் என்னை ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று எனக்கு பைலட் பயிற்சி அளித்தனர். 11 வயதில் நான் உலகின் இளம் பைலட் என்ற சாதனையைச் செய்து பைலட் ஆனேன்.

நான் செல்லும் இடங்களிலெல்லாம் என்னிடம் பல குழநத்தைகள் பைலட் ஆவது எப்படி? விண்வெளி வீரராவது எப்படி? என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களுக்காகவே என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து இந்தத் திரைப்படத்தை இயக்கினேன். அப்துல் கலாம் அவர்களும் எனக்கு ஆலோசனை வழங்கினார்.

படத்தை இயக்கிய அனுபவம் குறித்து..
நான்கு வருடங்கள் ஆனது படத்தை முடிப்பதற்கு. எனது தந்தை தினகரும், தா் சுனிதாவுமே என் முற்சிகள் எல்லாவற்றிற்கும் தூண்டுகோல் மற்றும் ஆதரவு எல்லாமே. திரைப்படம் எடுப்பது என்பது தனிமனித

முயற்சியல்ல. அது கூட்டான பலபேரின் உழைப்பு அடங்கியது என்பதை இந்தப் படம் எடுக்கும்போது நான் கற்றுக்கொண்டேன்.

படத்தின் மற்ற நடிகர்கள் பற்றி..
இப்படத்தில் சுரேஷ் ஹெப்ளிகர், சங்கீதா, சிவத்வாஜ், ஜனார்த்தனன் போன்ற மூத்த கலைஞர்களை நடிக்கவைத்து இயக்கியது எனக்குப் பெருமைாக இருக்கிறது. குழந்தைகளுக்கான படம் எடுப்பது நிறைய சுவராசியமாக உள்ளது. இன்னும் இதுபோன்ற படங்கள் எடுப்பேன்.

இது குழந்தைகளுக்கான படமா?
ஆம். குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியர்களும் எப்படி அனுகவேண்டும், எப்படி வளர்க்கவேண்டும் என்பதை இப்படம் குழந்தைகளின் பார்வையில் சொல்கிறது. படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. விஜய் சீனிவாசன் இசையமைத்துள்ளார். வந்தே மாதரம் என்னும் பாடலில் ஏழ வகையான இந்திய நடனங்கள் இடம்பெறுகின்றன. இதுதவிர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நான் கண்டுபிடித்துள்ள மனிதன் பறக்கும் கருவியைப் பற்றி படத்தில் விளக்கியுள்ளேன். விண்வெளி வீரர் ஆவதற்காக செய்யவேண்டிய முயற்சிகள் பற்றியும் படத்தில் விளக்கியிருக்கிறேன். ரஷ்யா, பிரான்ஸ், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் சென்று படம் பிடித்துள்ளோம்.

படத்தில் வரும் வருமானத்தை அப்துல்கலாமின் அறக்கட்டளைக்கு வழங்க இருப்பதாக தெரிவிக்கிறார் இந்த பில்லியன் டாலர் பேபி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.