தமன்னா தமிழில் இருந்து காணாமல் போனாலும் ஹிந்தி, தெலுங்கில் இன்னும் மார்க்கெட்டில் தான் உள்ளார். அவருக்கு சிறுவயது முதலே நாய் வளர்க்கவேண்டும் என்பது தீராத ஆசையாம். ஆனால் அவரது அம்மாவுக்கு நாய் வளர்ப்பது பிடிக்காது என்பதால் நாய் வளர்க்கவேயில்லை.
தமன்னா சினிமாவில் ரொம்ப பிஸியாகிய பின்னரும் நாய் வளர்த்துக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. இப்போது தெலுங்கில் ‘இட்ஸ் என்டர்டெயின்மன்ட்’ என்கிற படத்தில் நடித்துவருகிறார். என்டர்டெயின்மன்ட் என்கிற பெயருள்ள நாயைச் சுற்றி நகரும் கதையாகும்.
இதில் நாயுடன் ஜாலியாக நடித்த தமன்னாவிற்கு சிறுவயது ஆசை மீண்டும் தொற்றிக்கொண்டது. உடனே போய் ஒரு நாய்க்குட்டியை வாங்கிவிட்டாராம். அம்மா திட்டினாலும் பரவாயில்லை என்று வாங்கிவிட்ட அந்த நாய்க்குட்டி ‘பெபல்ஸ்’ என்று பெயர் வைத்துக் கொஞ்சி மகிழ்கிறாராம். ‘நாயாப் பொறந்தாலும் தமன்னா வீட்டு நாயாப் பொறக்கணும்னு’ ஒரு பழமொழி இருக்கில்ல சார் ?