கே.டி.ஆர் நிறுவனம் தயாரிக்கும் திகில் படம் ‘ஆ’. கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, எம்.எஸ்.பாஸ்கர், போன்றோர் நடிக்கின்றனர். இரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் இந்தப் படம் ஐந்து பேய்களைப் பற்றியது.
ஐந்து பேய்களும் வெவ்வேறு இடங்களில் காட்டப்படுகின்றன. முதல் பேய் ஏ.டி.ம்மில் அதன் காவலாளியை பயமுறுத்துகிறது. இந்தக் காட்சி மட்டுமே இருபது நிமிடங்கள் வருகிறதாம். நடுக்கடலில் தத்தளிக்கும் ஒருவனை சந்திக்கிறது இன்னொரு பேய். ஜப்பானில் நடப்பதாக வரும் பேய்க்கதை. அடுத்து ஒரு மருத்துவமனையில் நடக்கும் பேய்க்கதை. கடைசியாக அரேபியாவில் நடக்கும் ஒரு பேய்க்கதை.
இந்த ஐந்து பேய்க்கதைகளையும் தனித்தனியாக சொல்லி அவற்றை கடைசியில் ஒரே இணைப்பில் இணைப்பதுதான் படத்தின் திரைக்கதை. பேய் இருக்கிறது என்று எல்லோரும் நம்பும் வகையில் இப்படம் இருக்குமாம்.